/* */

நாகையில் எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழா விமரிசையாக கொண்டாடப்பட்டது

நாகையில் எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழா ஓ.எஸ். மணியன் தலைமையில் விமரிசையாக கொண்டாடப்பட்டது.

HIGHLIGHTS

நாகையில் எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழா விமரிசையாக கொண்டாடப்பட்டது
X

நாகையில் எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது.

நாகையில் எம்.ஜி.ஆரின் 105வது பிறந்த நாள் விழா விமரிசையாக கொண்டாடப்பட்டது. அ.தி.மு.க. கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற பிறந்தநாள் நிகழ்ச்சியில், முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கட்சிக் கொடியை ஏற்றி, எம்.ஜி.ஆரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்தும், படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

அதனை தொடர்ந்து தொண்டர்களுக்கு இனிப்புகளை முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் வழங்கினார். அதனைத் தொடர்ந்து செய்தியாளரிடம் பேசிய ஓ.எஸ்.மணியன்

முதலமைச்சர் ஸ்டாலின் தி.மு.க. அரசு 75 சதவீத தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றி உள்ளதாக கூறுகிறார். அதனை நாங்கள் மக்கள் முடிவுக்கே விட்டு விடுகிறோம். அ.தி.மு.க. அரசு கடந்த ஆண்டு பொங்கலுக்கு 2500 ரூபாய் பணமும் பொங்கல் தொகுப்பும் வழங்கிய நிலையில் தி.மு.க. அரசு 21 பொருட்கள் பொங்கல் தொகுப்பு வழங்கப்படும் என அறிவித்து தரமற்ற கலப்படமான பொருட்களை வெளிமாநிலத்தில் இருந்து வாங்கி வழங்கியது. மேலும் ஆன்மிகத்தில் நம்பிக்கை உள்ளவர்கள் 21 என்றாலே உருப்படாது என கூறுவது போல் திமுக அரசின் பொங்கல் தொகுப்பும் அதே நிலையில்தான் உள்ளது. தமிழ் தமிழ் என முழங்கும் தி.மு.க. அரசு பொங்கல் தொகுப்பு கொள்முதல் செய்வதில் தமிழ்நாட்டில் அனைத்துப் பொருட்களும் கிடைத்தும் வெளிமாநிலத்தில் இருந்து கொள்முதல் செய்ய என்ன காரணம்? பொங்கல் தொகுப்பு வழங்கியதன் மூலம் தி.மு.க. ஆட்சிக்கு மிகப்பெரிய அவமானம் ஏற்பட்டுள்ளது. செய்யாமல் மக்களை ஏங்க வைத்திருக்கிறதோ, தவிக்க வைத்திருக்கிறதோ அத்தனையும் அ.தி.மு.க.விற்கு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் சாதகமாக இருக்கும் என்றார்.

இந்நிகழ்வில் முன்னாள் அமைச்சர் ஜீவானந்தம், மாவட்ட கூட்டுறவு ஒன்றிய தலைவர் தங்க கதிரவன், ஒன்றிய குழு தலைவர் இராதாகிருட்டிணன், ஆசைமணி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Updated On: 17 Jan 2022 5:33 PM GMT

Related News

Latest News

  1. திருவண்ணாமலை
    அண்ணாமலையார் கோயிலில் வரும் 4 ம் தேதி முதல் தாராபிஷேகம்
  2. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை
  3. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  4. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  6. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  7. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  8. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  9. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  10. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...