/* */

நாகையில் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல தடை: கலெக்டர் உத்தரவு

நாகையில் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல தடை விதித்து மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் உத்தரவிட்டுள்ளார்.

HIGHLIGHTS

நாகையில் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல தடை: கலெக்டர் உத்தரவு
X

வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்வது பற்றி அனைத்து துறை அதிகாரிகளுடன் மாவட்ட  கலெக்டர் அருண்தம்புராஜ் ஆலோசனை நடத்தினார்.

வடகிழக்கு பருவமழை எதிர்கொள்வது குறித்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை ஆய்வுக் கூட்டம் நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் தலைமையில் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.

கூட்டத்தில் பொதுப்பணித்துறை, சுகாதாரத் துறை, ஊரக வளர்ச்சித் துறை உள்ளிட்ட அனைத்துத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். மேலும் கிராம ஊராட்சி செயலாளர்கள் கிராம நிர்வாக அலுவலர்கள் காணொலி காட்சி மூலம் கூட்டத்தில் பங்கேற்றனர். அதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ்

வடகிழக்கு பருவமழை எதிர்கொள்வதற்கும், அதனால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை சமாளிப்பதற்காக நாகை மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சி செயலாளர்கள் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் 24 மணி நேரமும் பணியில் இருக்க உத்தரவிடப்பட்டுள்ளதாகவும், மேல் அதிகாரிகளின் உத்தரவுக்கு காத்திராமல் சூழ்நிலைக்கு ஏற்ப அவர்களே முடிவு எடுக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

மேலும் மீனவர்கள் 14ஆம் தேதி வரை கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், 12 புயல் பாதுகாப்பு கட்டிடம் 144 சமுதாயக்கூடம் , பள்ளி மற்றும் கல்லூரிகள் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்ட பாதுகாப்பு மையங்கள் தயார் நிலையில் உள்ளதாக அவர் தெரிவித்தார். பொதுமக்களை தங்க வைக்க கூடிய முகாம்களில் உணவு குடிநீர் மின் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் தயார் நிலையில் வைத்திருக்க உத்தரவிடப்பட்டுள்ளதாகவும், பொதுப்பணித்துறை சார்பில் 20,000 மணல் மூட்டைகளும், 2000 வெள்ளத் தடுப்புக் கம்புகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும், ஆறுகளின் கரைகளை இருபத்தி நான்கு மணி நேரமும் கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் தெரிவித்தார்.


Updated On: 8 Nov 2021 10:42 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    சென்னையில் பிரமாண்டமான தாஜ் வீடுகள் விலை தெரியுமா...?
  2. உசிலம்பட்டி
    கனமழை..! சதுரகிரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை..!
  3. கல்வி
    அரசின் சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் வேணும்..? பள்ளி...
  4. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே கோடைகால கபாடி பயிற்சி..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  8. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  10. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...