/* */

நாகையில் மீனவர்கள் தேர்தல் புறக்கணிப்பு

நாகையில் மீனவர்கள் தேர்தல் புறக்கணிப்பு
X

தடை செய்யப்பட்ட சுருக்குமடி வலைகளை பயன்படுத்த அனுமதி வழங்கவில்லை என தமிழக அரசை கண்டித்து, நாகப்பட்டினம் மீனவர்கள் இன்று முதல் தேர்தல் புறக்கணிப்பு போராட்டம் அறிவித்துள்ளனர்.

நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர் மாவட்டத்தில் உள்ள 20 ஆயிரம் மீனவர்கள் 150க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் சுருக்குமடி வலைகளை பயன்படுத்தி மீன்பிடித்து வந்தனர். தடை செய்யப்பட்ட வலை என்பதால், இதனை பயன்படுத்தி கடலில் மீன்பிடிக்க கூடாது என தமிழக அரசு சென்ற ஆண்டு தடை ஆணை பிறப்பித்தது. இந்நிலையில் சுருக்குமடி வலைகளை பயன்படுத்தி மீன்பிடித்து வந்த மீனவர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டதை தொடர்ந்து சுருக்கு மடி வலைகளை பயன்படுத்துவது குறித்த அவசர ஆலோசனை கூட்டம் இன்று நாகை மாவட்டம் நம்பியார்நகரில் நடைபெற்றது.

இந்த அவசர ஆலோசனைக் கூட்டத்தில், தடை செய்யப்பட்ட சுருக்குமடி வலைகளை பயன்படுத்த அனுமதி வழங்காத தமிழக அரசை கண்டித்து, நம்பியார்நகர் மீனவர்கள் இன்று முதல் தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபடுவது என ஏகமனதாக முடிவு எடுக்கப்பட்டது. சுருக்கு மடி வலைகளை பயன்படுத்த அரசு அனுமதி அளிக்கவில்லை என்றால் தேர்தல் நெருங்கும் வேளையில் பல கட்ட போராட்டங்களை நடத்தப் போவதாக நம்பியார் நகர் மீனவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Updated On: 19 March 2021 10:22 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    🔴LIVE: சீமான் செய்தியாளர் சந்திப்பு | #Seeman #NTK #SrilankanTamils...
  2. லைஃப்ஸ்டைல்
    அம்மாவுக்கு சொல்லுங்க.. அவங்க ரொம்ப சந்தோஷப்படுவாங்க
  3. ஈரோடு
    அந்தியூர் அருகே 2 ஏக்கர் ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு
  4. லைஃப்ஸ்டைல்
    கோவக்காய் சாப்பிட்டு இருக்கீங்களா? எடை குறைக்குமாம்..!
  5. லைஃப்ஸ்டைல்
    காலைப் பொழுதில் ஒரு புன்னகையுடன்: உங்கள் நாளை அழகாக்கும் ரகசியங்கள்
  6. கல்வி
    கொஞ்சம் கொஞ்சமாக காணாமல் போகும் கர்சிவ் ரைட்டிங் எனும் கையெழுத்துக்...
  7. உலகம்
    ஆறுமாத குழந்தை மீது பலமுறை துப்பாக்கிச்சூடு..! தந்தை கைது..!
  8. திருவள்ளூர்
    பழுதடைந்த குடிநீர் தொட்டியை அகற்ற கிராம மக்கள் கோரிக்கை!
  9. உலகம்
    கடந்த ஆண்டில் வெளுத்துவிட்ட உலகின் 60% க்கும் மேற்பட்ட பவளப்பாறைகள்
  10. அரசியல்
    சீனாவை எதிர்க்க இந்தியாவுக்கு தைரியம் இருக்கா? படீங்க உங்களுக்கே...