/* */

மதுரை வழியாக மைசூர் - திருவனந்தபுரம் பண்டிகை கால சிறப்பு ரயில்

பண்டிகை கால கூட்ட நெரிசலை சமாளிக்க மைசூர் - திருவனந்தபுரம் இடையே ஒரு சிறப்பு ரயிலை இயக்க தென்னக ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது

HIGHLIGHTS

மதுரை வழியாக மைசூர் - திருவனந்தபுரம் பண்டிகை கால சிறப்பு ரயில்
X

பைல் படம் 

மதுரை வழியாக மைசூர் - திருவனந்தபுரம் பண்டிகை கால சிறப்பு ரயில்

பண்டிகை கால கூட்ட நெரிசலை சமாளிக்க மைசூர் - திருவனந்தபுரம் ரயில் நிலையங்கள் இடையே ஒரு சிறப்பு ரயிலை இயக்க தென்மேற்கு ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி மைசூர் - திருவனந்தபுரம் சிறப்பு ரயில் (06201) செப்டம்பர் 7 அன்று மதியம் 12.15மணிக்கு மைசூரில் இருந்து புறப்பட்டு மறுநாள் காலை 07.30 மணிக்கு திருவனந்தபுரம் சென்று சேரும்.

மறு மார்க்கத்தில் திருவனந்தபுரம் - மைசூர் சிறப்பு ரயில் (06202) செப்டம்பர் 8 அன்று மதியம் 12.45 மணிக்கு திருவனந்தபுரத்தில் இருந்து புறப்பட்டு மறுநாள் காலை 11.45 மணிக்கு மைசூர் சென்று சேரும். இந்த ரயில்கள் மாண்டியா, கெங்கேரி, பெங்களூரு, பெங்களூரு கண்டோன்மென்ட், ஓசூர், தர்மபுரி, ஓமலூர் சேலம், நாமக்கல், கரூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், கோவில்பட்டி, திருநெல்வேலி, நாகர்கோவில் டவுன் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

இது ரயில்களில் ஒரு குளிர்சாதன இரண்டடுக்கு படுக்கை வசதி பெட்டி, 2 குளிர்சாதன வசதி மூன்றடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 12 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகள், 2 இரண்டாம் வகுப்பு பொதுப்பெட்டிகள் இணைக்கப்படும்.

ரயில் பாதையை பலப்படுத்தும் பணி - மதுரை - செங்கோட்டை ரயில் ஆறு நாட்களுக்கு ரத்து

ராஜபாளையம் - சங்கரன் கோவில் பிரிவில் ரயில் பாதை பலப்படுத்தும் பணிகள் நடைபெறுவதால் மதுரையில் காலை 11.30 மணிக்கு புறப்பட வேண்டிய மதுரை - செங்கோட்டை (06663) மற்றும் செங்கோட்டையில் இருந்து காலை 11.50 மணிக்கு புறப்பட வேண்டிய செங்கோட்டை - மதுரை (06664) முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில்கள் ஆகியவை செப்டம்பர் 5 முதல் செப்டம்பர் 10 வரை முழுமையாக ரத்து செய்யப்படும்.

Updated On: 4 Sep 2022 5:15 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  2. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  3. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...
  4. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...
  5. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் பிறந்ததே ஒரு சிறப்புதான்..! சிறப்பான வாழ்த்து..!
  6. கும்மிடிப்பூண்டி
    குப்பை கழிவுகள் சேகரிக்கும் தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து..!
  7. ஈரோடு
    சத்தியமங்கலம் அருகே யானை தந்தங்கள் திருடப்பட்ட வழக்கில் ஒருவர்
  8. லைஃப்ஸ்டைல்
    போலரைஸ்டு சன்கிளாஸ்ல அப்படி என்னதான் ஸ்பெஷல்?
  9. திருப்பூர்
    திருப்பூா் தொகுதி தோ்தல் வாக்கு எண்ணும் பணி; 1,274 முகவா்கள் நியமனம்
  10. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் திடீர் கோடை மழை!விவசாயிகள் பெரு மகிழ்ச்சி!