மதுரை மாநகர க்ரைம் செய்திகள்
![மதுரை மாநகர க்ரைம் செய்திகள் மதுரை மாநகர க்ரைம் செய்திகள்](/images/placeholder.jpg)
மதுரை மாநகரில் நடந்த குற்றச்சம்பவங்களின் தொகுப்பு.
சிறுமிக்கு கட்டாய திருமணம்; பெற்றோரிடம் போலீஸ் விசாரணை
விளாச்சேரி, முனியாண்டிபுரம் முதல் தெருவை சேர்ந்தவர் சிவகுருநாதன் (34) . இவருக்கும், கருமாத்தூர் கோவிலாங்குளத்தை சேர்ந்த செல்வம் என்பவரின் மகளுக்கும் கட்டாய திருமணம் நடத்தி வைத்துள்ளனர். இந்த தகவல், குழந்தைகள் நல பாதுகாப்பு குழு அதிகாரிக்கு தெரிய வந்தது. அதிகாரி சுமதி, நேரில் அங்கு சென்று இதுகுறித்து விசாரணை நடத்தினார் .விசாரணையில், சிறுமிக்கு கட்டாய திருமணம் செய்தது உறுதியானது. இதை தொடர்ந்து, மாப்பிள்ளை சிவகுருநாதன் (34) அவருடைய தந்தை சிவநாதன் (50) தாய் செல்வி (50) சிறுமியின் தந்தை கருமாத்தூரை சேர்ந்த செல்வம் (50) தாய் உமாராணி (45) ஆகியோர் மீது திருப்பரங்குன்றம் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, இருதரப்பு பெற்றோர்களிடமும் விசாரிக்கின்றனர்.
வாலிபர் தற்கொலை
அனுப்பானடி, பகலவன் நகரை சேர்ந்தவர் பூஜை பாண்டி மகன் மதி. (21) இவருக்கு நிரந்தரமாக வேலை இல்லை. இதனால் மது குடித்துவிட்டு வீட்டுக்கு வந்தார். இதை அவருடைய அம்மா கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்த மதி, வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் .இதுகுறித்து, தெப்பக்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
திடீர் காய்ச்சலால் பெண் குழந்தை பலி
எஸ். எஸ் காலனி பாரதியார் நகர் மூன்றாவது தெருவை சேர்ந்தவர் பாலமுருகன் இவரது 11 மாத பெண் குழந்தை ரிஷிகா ஸ்ரீ குழந்தைக்கு, திடீரென்று காய்ச்சல் ஏற்பட்டது. சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, காய்ச்சல் அதிகமாகி, செல்லும் வழியிலேயே, குழந்தை உயிரிழந்தது. இதுகுறித்து, எஸ் எஸ் காலனி போலீசார் வழக்குப்பதிவு செய்து, ரிஷிகா ஸ்ரீ யின் உயிரிழப்புக்கான காரணம் குறித்து, விசாரிக்கின்றனர்.
மாணவி தூக்கு போட்டு தற்கொலை
திருப்பாலை, கண்ணனேந்தலை சேர்ந்தவர் செந்தில்குமார் மகள் ஹரிப்பிரியா 16. இவர் மங்கையர்கரசி பள்ளியில், பிளஸ் 1 படித்து வந்தார். இவர், கடந்த சில நாட்களாக மனக்கவலையில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில், வீட்டில் தனியாக இருந்தபோது தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து திருப்பாலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
கடையை உடைத்து பணம், செல்போன்கள் கொள்ளை
மதுரை, முத்துராமலிங்கபுரம் இரண்டாவது தெருவை சேர்ந்தவர் காதர் பாட்ஷா மகன் சிராஜுதீன் 32.இவர், ஸ்காட்ரோடு மீனாட்சி பஜாரில் செல்போன் கடை நடத்தி வருகிறார். வழக்கம்போல் வியாபாரம் முடிந்து, கடையை மூடிவிட்டு சென்றார். மறுநாள் கடையை திறக்க வந்தபோது, கடையின் கதவுகள் உடைக்கப்பட்டிருந்தன. கடையில் வைத்திருந்த 14 செல்போன்கள், விற்பனை செய்து வைத்திருந்த பணம் ரூ 2 லட்சத்து 34 ஆயிரத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்று விட்டனர். இதுகுறித்து கடை உரிமையாளர் சிராஜுதீன், திலகர் திடல் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu