/* */

புகையிலை பொருட்கள் விற்றவர்கள் கைது உள்ளிட்ட மதுரை நகர கிரைம் செய்திகள்

புகையிலை பொருட்கள் விற்றவர்கள் கைது உள்ளிட்ட மதுரை நகர கிரைம் செய்திகளை அறிய தொடர்ந்து படியுங்கள்.

HIGHLIGHTS

புகையிலை பொருட்கள் விற்றவர்கள் கைது உள்ளிட்ட மதுரை நகர கிரைம் செய்திகள்
X

மதுரை வண்டியூரில் தூங்கிக் கொண்டிருந்த வாலிபர் காதில் ரத்தம் வழிந்த நிலையில் உயிரிழந்தது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.வண்டியூர் மெயின் ரோடு நேதாஜி நகரை சேர்ந்தவர் வீரணன் மகன் கணேசன் (வயது29 ).இவருக்கு குடிப்பழக்கம் இருந்தது .இந்நிலையில் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தவர் வெகு நேரமாக எழுந்திருக்கவில்லை.இதனால் வீட்டிலுள்ளோர் சென்று பார்த்த போது அவரது காதில் ரத்தம் வழிந்த நிலையில் இறந்து கிடந்தார். இது குறித்து அவருடைய தந்தை வீரணன் கொடுத்த புகாரின்பேரில் அண்ணா நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து அவரது சாவுக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுரை காமராஜர் சாலையில் குஜராத் மாநில வேனில் தடை செய்யப்பட்ட புகையிலை பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. மதுரை காமராஜர் சாலையில் குஜராத் மாநில வேனில் புகையிலை கடத்திய நான்கு பேர் உள்பட ஏழு பேரை போலீசார் கைது செய்து ரூ. 41,300ஐ பறிமுதல் செய்தனர்.

மதுரை தெப்பக்குளம் போலீஸ் சப்இன்ஸ்பெக்டர் சுந்தரபாண்டியன். இவர் வாகன சோதனையில் ஈடுபட்டார். காமராஜர் சாலை காந்தி மெட்டல் அருகே ஆஸ்பத்திரி ஒன்றினருகே சென்ற குஜராத் மாநில பதிவு எண் கொண்ட வேன் ஒன்றை மடக்கி சோதனை செய்தனர். அப்போது அந்த வேனில் 52 தடை செய்யப்பட்ட புகையிலைப் பாக்கெட்டுகள் இருந்தன. மேலும் புகையிலை பாக்கெட்டுகள் விற்பனை செய்து வைதிருந்த 41 ஆயிரத்து 300 ரூபாயை பறிமுதல் செய்தனர். அவர்களில் மூன்று பேரை பிடித்து விசாரணை செய்தபோது அவர்கள் வேனில் கடத்திச் சென்று புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்தது தெரியவந்தது. அவர்கள் ராம்நாட் ரோடு அம்சத் தெருவை சேர்ந்த ரமேஷ் குமார் (44, ) ராஜேஷ்குமார் வியாஸ்(49,) எல்லிஸ் நகர் பன்வர்லால் மகன் சுரேஷ்பிஸ்னாய் (27 )என்று தெரிய வந்தது .அவர்களை கைது செய்து வேனில் வைத்திருந்த 502புகையிலை பாக்கெட்டுகளையும் விற்பனை செய்தபணம் ரூ41ஆயிரத்து 300ஐயும் பறிமுதல் செய்தனர் .

மற்றொரு சம்பவமாக காமராஜர் சாலையில் உள்ள தியேட்டர் அருகே கடையில் வைத்து தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதாக தெப்பக்குளம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அவர்கள் அந்த பகுதியில் திடீர் சோதனை செய்து அங்கு விற்பனை செய்த லட்சுமிபுரம் ஆறாவது தெருவை சேர்ந்த சிவச்சந்திரன்(47, )பாலரங்காபுரம் முத்தாரம் (43 ,)தெற்கு மாசி வீதி வெங்கடாசலபதி ஐயர் சந்து நிதேஷ் குமார் (39,)லெட்சுமிபுரம் நான்காவது சந்து பிரகாஷ்(31 )ஆகியோரை கைது செய்து அவர்களிடமிருந்து 48 புகையிலைப் பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.

Updated On: 5 Dec 2022 7:31 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    போலி உறவுகளை காலி செய்யுங்கள்..! வேண்டாத சுமைகள்..!
  2. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை ஒரு நந்தவனம்..! ரசித்து வாழுங்கள்..!
  3. ஈரோடு
    ஈரோடு அட்வகேட் அசோசியேசன் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு
  4. வீடியோ
    பெரிய அளவில் பேரம் பேசிய Uddhav Thackeray | பொதுவெளியில் போட்டுடைத்த...
  5. வீடியோ
    🔴LIVE : சீனாவில் இருந்து வெளியேறும் கார்ப்பரேட்! ஆளுநர் RN.ரவி சூசக...
  6. லைஃப்ஸ்டைல்
    நட்சத்திரப்பழம் சாப்பிட்டு இருக்கீங்களா? தெரிஞ்சா விடமாட்டீங்க..!
  7. ஆன்மீகம்
    ‘அமைதியின் ஆழத்தில் மட்டும்தான் கடவுளின் குரல் கேட்கும்’ - பாபாவின்...
  8. லைஃப்ஸ்டைல்
    கேளுங்கள் கொடுக்கப்படும்; தட்டுங்கள் திறக்கப்படும் - கிறிஸ்துமஸ்...
  9. சினிமா
    "உத்தமவில்லன்" கமல் மீது லிங்குசாமி புகார்..!
  10. ஈரோடு
    மூளைச்சாவு அடைந்த நாமக்கல் கல்லூரி மாணவியின் உடல் உறுப்புகள் தானம்