ஈரோடு அட்வகேட் அசோசியேசன் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு

Erode news- ஈரோடு அட்வகேட் அசோசியேசன் புதிய நிர்வாகிகள் பதவியேற்றனர்.
Erode News, Erode Today News, Erode Live News - ஈரோடு அட்வகேட் அசோசியேசன் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா நடைபெற்றது.
ஈரோடு அட்வகேட் அசோசியேசனின் 2024-2025ம் ஆண்டுக்கான புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா ஈரோடு சம்பத்நகரில் உள்ள இந்திய மருத்துவ சங்க கூட்டரங்கில் நடைபெற்றது.
விழாவில் சங்கத்தின் புதிய தலைவராக பி.பி.துரைசாமி, செயலாளராக கே.சண்முகசுந்தரம், பொருளாளராக வி.எஸ்.அருண்கணேஷ், துணைத்தலைவராக எல். பாலசுப்பிரமணியம், இணைச்செயலாளராக என். குமரேசன், நூலகராக பி. கார்த்திகேயன், செயற்குழு உறுப்பினர்களாக ஏ.சுந்தரம், என்.சரவணன், சி.முத்துகு மார், எம்.தன்ராஜ், பி.தனசேகர், பி.மகேஸ்வரி, கே.நவமணி,பி.யசோதா, எம்.வேல் முருகன் ஆகியோர் பதவியேற்றனர்.
தொடர்ந்து, சங்கத்தின் முன்னாள் தலைவர் ஈஸ்வரமூர்த்தி தனது பொறுப்பை புதிய தலைவர் பி.பி.துரைசாமியிடம் ஒப்படைத்தார். புதிதாக பதவியேற்றவர்களுக்கு மூத்த வக்கீல்கள் பி.சி.பழனிசாமி, கிருஷ்ணமூர்த்தி, சண்முகம், நவநீதகிருஷ்ணன், நல்லசிவம், சங்க முன்னாள் செயலாளர் முருகானந்தம் உள்பட வக்கீல்கள் பலர் வாழ்த்து தெரிவித்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu