சோழவந்தான் அருகே பஸ் நிறுத்தத்தில் அரசு பேருந்து நின்று செல்ல கோரிக்கை

சோழவந்தான் அருகே  பஸ் நிறுத்தத்தில் அரசு பேருந்து  நின்று செல்ல கோரிக்கை
X

முள்ளிப்பள்ளத்தில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் நிற்காமல் செல்வதால், பள்ளிக்குச் செல்லும் மாணவ மாணவியர் கல்லூரிகளுக்கு செல்பவர்கள் வர்த்தகம் மற்றும் பணி நிமித்தமாக செல்லும் பொதுமக்கள் ஆகியோர் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர் 

சோழவந்தான் அருகே நிறுத்தத்தில் பேருந்து நின்று செல்லாததால் பொதுமக்கள் மற்றும் மாணவ மாணவிகள் அவதிப்படும் நிலை நீடிக்கிறது

சோழவந்தான் அருகே நிறுத்தத்தில் பேருந்து நின்று செல்லாததால் பொதுமக்கள் மற்றும் மாணவ மாணவிகள் அவதிப்படும் நிலை ஏற்பட்டது.

மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளம் கிராமத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்கு ,அரசு தொடக்கப் பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளி தனித்தனியாக உள்ளது. மேலும் அருகில் உள்ள சோழவந்தான், குருவித்துறை போன்ற பகுதிகளிலும் அரசு மேல்நிலைப்பள்ளிகள் உள்ளது .இங்கிருந்து மதுரை மற்றும் வெளியிடங்களுக்கு பணி நிமித்தமாக ஏராளமானோர் அரசு பேருந்தை நம்பியே உள்ளார்கள்.

இந்நிலையில், மதுரை மற்றும் சோழவந்தான் அரசு போக்குவரத்து பனிமனையிலிருந்து முள்ளிபள்ளத்தை அடுத்த குருவித்துறை, மன்னாடிமங்கலம், விக்கிரமங்கலம் ஆகிய பகுதிகளுக்கு பேருந்துகள் சென்று வருகின்றன.இந்தப் பேருந்துகள் முள்ளிப்பள்ளத்தில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் நிற்காமல் செல்வதால், பள்ளிக்குச் செல்லும் மாணவ மாணவியர் கல்லூரிகளுக்கு செல்பவர்கள் வர்த்தகம் மற்றும் பணி நிமித்தமாக செல்லும் பொதுமக்கள் ஆகியோர் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர் .

மேலும், கூடுதல் பேருந்து இயக்கப்படாததால் காலை மற்றும் மாலை நேரங்களில் பேருந்துகளில் மாணவர்கள் அதிக அளவில் செல்வதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் கூறுகின்றனர்.சமீபத்தில், மதுரை செங்கல்பட்டு உள்ளிட்ட இடங்களில் படியில் தொங்கி சென்ற மாணவர்கள் கீழே விழுந்ததில் ஒருவர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.ஆகையால், அரசு போக்குவரத்து கழகம் இதனை கருத்தில் கொண்டு கூடுதல் பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, இப்பகுதி பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags

Next Story