மதுரை கோயில்களில் கந்த சஷ்டி விழா: ஆயிரக்காண பக்தர்கள் பங்கேற்பு
![மதுரை கோயில்களில் கந்த சஷ்டி விழா: ஆயிரக்காண பக்தர்கள் பங்கேற்பு மதுரை கோயில்களில் கந்த சஷ்டி விழா: ஆயிரக்காண பக்தர்கள் பங்கேற்பு](https://www.nativenews.in/h-upload/2022/10/30/1610925-img-20221030-wa0079.webp)
திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில், அம்பாள், முருகனுக்கு வேல் கொடுத்தல்.
முருகனின் அறுபடை வீடுகளில் முதல் படை வீடு என பெருமை பெற்றது திருப்பரங்குன்றம். இங்கு கொண்டாடப்படும் விழாக்களில் கந்த சஷ்டி விழா பிரசித்தி பெற்றது. ஆண்டுதோறும் ஏழு நாட்கள் நடைபெறும்.
முன்னதாக மூலஸ்தானத்தில் உள்ள சுப்பிரமணிய சுவாமிக்கு கந்தசஷ்டி காப்பு கட்டுதல் நடைபெற்றது. அதனை தொடர்ந்து உற்சவர் சந்நிதியில் சுப்பிரமணிய சுவாமிக்கும், சண்முகர் சந்நிதியில் உள்ள சண்முகர், வள்ளி, தெய்வானைக்கும் காப்பு கட்டப்பட்டது.
தொடர்ந்து விரதம் இருக்கும் பக்தர்களுக்கு சிவாச்சாரியார்கள் காப்பு கட்டினார்கள். முன்னதாக உற்சவர் சந்நிதியில் உள்ள சுப்பிரமணிய சுவாமி, தெய்வானைக்கும், சண்முகர் சன்னதியில் உள்ள சண்முகர், வள்ளி, தெய்வானைக்கு பால், பன்னீர், இளநீர் உள்ளிட்ட 16 வகை சிறப்பு அபிஷேகங்கள் ஆராதனைகள் நடைபெற்றன.விழாவினை முன்னிட்டு தினமும் காலையிலும், மாலையிலும் சண்முகார்ச்சனை நடைபெறும். விழாவினை முன்னிட்டு தினமும் சண்முகர் வெள்ளை, பச்சை, சிவப்பு உள்ளிட்ட பல்வேறு அலங்காரங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
இதேபோல தினமும் மாலை சுப்பிரமணிய சுவாமி தெய்வானையுடன் விடையாத்தி சப்பரத்தில் எழுந்தருளி திருவாச்சி மண்டபத்தை ஆறு முறை வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வேல் வாங்குதல் நிகழ்ச்சியும், கந்த சஷ்டி திருவிழாவின் ஐந்தாம் நாளான( 29ஆம் தேதி) நேற்று மாலை 6.30 மணியளவில் முருகப்பெருமான் தன் தாயார் கோவர்த்தனாம்பிகையிடம் சக்திவேல் பெற்று (முருகப்பெருமானின் பிரதிநிதி) சகல பரிவாரங்களுடன் நந்தி வலம் வந்து சமர்ப்பித்தார். இதையடுத்து ஞாயிற்றுக்கிழமை மாலையில் சூரசம்ஹார லீலை நடைபெற்றது. 31ஆம் தேதி சஷ்டி தேரோட்டம் நடைபெறும். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்து வருகிறது.
கோவிலில் தங்கி விரதம் இருக்கும் பக்தர்கள்: திருப்பரங்குன்றம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமப் பகுதிகள், விருதுநகர், சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோயில் வளாகத்திலேயே தங்கி விரதம் இருந்தனர்.விரதம் இருக்கும் பக்தர்களுக்கு கோயில் நிர்வாகம் சார்பில் தினமும் தினை மாவு, எலுமிச்சம் சாறு, பால் மற்றும் அன்னதானம் வழங்கப்படும். மேலும் பக்தர்களின் வசதிக்காக குடிநீர், மின்விளக்கு, கழிப்பறை உள்ளிட்ட வசதிகளும் செய்து தரப்பட்டிருந்தது.
மதுரை மாவட்டம், வாடிப்பட்டி வட்டம், சோழவந்தான் அருள்மிகு பிரளயநாதர் சிவன் ஆலயத்தில், கந்த சஷ்டி ஒட்டி பாலமுருகனுக்கு சிறப்பு அபிஷேக் அர்ச்சனை வழிபாடுகள் நடைபெற்றது.
அதைத் தொடர்ந்து, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகிகள் செய்து இருந்தனர்.இதே போன்று ,மதுரை மேலமடை அருள்மிகு சௌபாக்கிய விநாயகர் ஆலயத்திலும், தாசில்தார் நகர் சித்தி விநாயகர் ஆலயத்திலும், மதுரை அண்ணா நகர் சர்வேஸ் ஆலயத்திலும் கந்த சஷ்டி ஒட்டி முருகனுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது .இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
இதேபோல், மதுரை ஆவின் பால் விநாயகர் ஆலயத்தில், கந்த சஷ்டி மை ஒட்டி, வள்ளி தெய்வானை முருகனுக்கு ஈஸ்வர பட்டர், சிறப்பு பூஜைகளை செய்து, பக்தர்களுக்கு பிரசாதங்களை வழங்கினார்.மதுரை அண்ணாநிலையம் பூங்கா முருகன் ஆலயத்திலும், கந்த சஷ்டியையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu