மதுரை அருகே அலங்காநல்லூரில் வட்டார சுகாதார பேவைக்கூட்டம்

மதுரை அருகே அலங்காநல்லூரில் வட்டார சுகாதார பேவைக்கூட்டம்
X

அலங்காநல்லூரில் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற  வட்டார சுகாதார பேரவை கூட்டம் 

மதுரை மாவட்டம், அலங்காநல்லூரில் தனியார் திருமண மண்டபத்தில், வட்டார சுகாதார பேரவை கூட்டம் நடைபெற்றது.

மதுரை மாவட்டம், அலங்காநல்லூரில் தனியார் திருமண மண்டபத்தில், வட்டார சுகாதார பேரவை கூட்டம் நடைபெற்றது. முன்னதாக, வட்டாரம் மருத்துவர் வளர்மதி தலைமை வகித்தார்.

தொடர்ந்து,அலங்காநல்லூர் பேரூராட்சித் தலைவர் ரேணுகா ஈஸ்வரி கோவிந்தராஜ், குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார்.இதில், பாலமேடு பேரூராட்சித் தலைவர் சுமதி பாண்டியராஜன், மருத்துவ அலுவலர் பொன் பார்த்திபன், மாவட்ட உதவி திட்ட அலுவலர்விஜய் ஆனந்த்,அலங்காநல்லூர் பேரூராட்சி செயல் அலுவலர் ஜிலா பானு, பாலமேடு பேரூராட்சி செயல் அலுவலர் சுமதி, ஊராட்சி ஓன்றிய ஆணையாளர்கள் கதிரவன், பிரேமா,குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் உஷா மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story