வாடிப்பட்டி பேரூராட்சி சபைக் கூட்டத்தை புறக்கணித்த அதிமுக கவுன்சிலர்கள்

வாடிப்பட்டி பேரூராட்சி சபைக் கூட்டத்தை புறக்கணித்த அதிமுக கவுன்சிலர்கள்
X

வாடிப்பட்டி , பேரூராட்சியில் சபைக் கூட்டத்தை புறக்கணித்த அதிமுக கவுன்சிலர்கள்:

பேரூராட்சி சபைகூட்டத்தை புறக்கணித்த அதிமுக கவுன்சிலர்கள் பேரூராட்சி நிர்வாகம் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை தெரிவித்தனர்

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி பேரூராட்சி சபை கூட்டத்தை புறக்கணித்த அதிமுக கவுன்சிலர்கள் பேரூராட்சி நிர்வாகம் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை தெரிவித்தனர்.

உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு, கிராம சபை கூட்டங்களை போல நகர சபை கூட்டங்கள் தமிழகம் முழுவதும் நடைபெறும் என தமிழக அரசு அறிவித்தது.. இந்த கூட்டங்களில் மக்களின் அடிப்படை தேவைகளை நேரில் சென்று கவனித்து அவற்றை நிறைவேற்றித் தருவதில் உள்ளாட்சி அமைப்புகள் முக்கிய பணியாற்றுகின்றன. தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி மற்றும் ஊராட்சித் தேர்தல்கள் நடந்து முடிந்து அவை முழு அளவில் செயல்பட்டு வருகின்றன. மக்களின் அன்றாட தேவைகள் மற்றும் பிரச்னைகளை எடுத்துக் கூறுவதற்கு கிராம சபைக் கூட்டங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

குடிநீர் வினியோகம், குடிநீர் குழாய் இணைப்பு, கட்டிடம் கட்டுவது, விதி மீறிய கட்டிடங்கள், தொற்று நோய் தடுப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை இந்த கூட்டங்களில் எடுத்துரைத்து நிவாரணம் பெறலாம். குடியரசு தினமான ஜனவரி 26-ம் தேதி, உழைப்பாளர் தினமான மே 1-ம் தேதி, சுதந்திர தினமான ஆகஸ்டு 15ம் தேதி, காந்தி ஜெயந்தி தினமான அக்டோபர் 2-ம் தேதி ஆகிய நாட்களில் தமிழகத்தின் அனைத்து கிராம பஞ்சாயத்துகளிலும் கிராம சபை கூட்டங்கள் நடத்தப்படுகின்றன.

ஒரு கிராமத்தில் உள்ள ஆண்கள், பெண்கள் என அனைவருமே இதில் பங்கேற்கலாம். கிராம பஞ்சாயத்து தலைவர், கிராம சபை கூட்டத்திற்கு தலைமை வகிப்பார். இந்நிலையில் கிராம சபை கூட்டம் போல நகர உள்ளாட்சிகளிலும் வார்டு கமிட்டி அமைத்து, வார்டு வாரியாக பகுதி சபை கூட்டங்கள் நடத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி, மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி என நகர்ப்புற உள்ளாட்சிகளில் உள்ள வார்டுகள் தோறும், வார்டு கவுன்சிலர் தலைமையில் ஒரு குழுவை உள்ளாட்சி மன்றங்கள் அமைத்துள்ளன.

இந்த கூட்டத்தில் மக்கள் வைக்கும் கோரிக்கைகள் குறித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கு அனுப்பப்படும். இதற்கான முன்னேற்பாடு பணிகளை அந்தந்த வார்டு கவுன்சிலர்களும், அதிகாரிகளும் தீவிரப்படுத்தியுள்ளனர். இந்நிலையில் உள்ளாட்சி தினம் கொண்டாடப்படுவதையொட்டி, தமிழகம் முழுவதும் கிராமம், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிளில் கூட்டம் நடைபெற்றது.இந்த கூட்டங்களில் அந்தந்த பகுதியில் உள்ள மக்கள் பிரதிநிதிகளான எம்.பி, எம்எல்ஏக்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் பங்கேற்க உள்ளனர். கூட்டத்தில் கலந்து கொண்டு பொதுமக்கள் தங்கள் குறைகளை தெரிவித்து தீர்வு காணலாம்.

12,525 கிராமங்களிலும் நடக்கிறது: தமிழகத்தில் குடியரசு தினம், மே தினம், சுதந்திர தினம், காந்தி ஜெயந்தி ஆகிய நாட்களில் 12 ஆயிரத்து 525 கிராமங்களிலும் கிராம சபைக் கூட்டம் நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு நவம்பர் 1ம் தேதி உள்ளாட்சி தினத்திலும் கிராமசபை கூட்டத்தை நடத்த மாவட்ட கலெக்டர்களுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது. வேளாண்துறை, உணவுத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் அதிகாரிகளும் கூட்டங்களில் பங்கேற்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தமிழக அரசின் அறிவுறுத்தலின்படி, மதுரை மாவட்டம், வாடிப்பட்டி பேரூராட்சியில், ,வார்டு குழு உறுப்பினர் சபை கூட்டம் நடைபெற்றது. இதில், அதிமுக வார்டு உறுப்பினர்களிடம் ஆலோசிக்காமலும், அவர்களை எதிர்த்து தேர்தலில் தோற்ற உறுப்பினர்களை நியமனம் செய்ததை கண்டித்து நேற்று நடைபெற்ற வார்டு குழு உறுப்பினர் சபை கூட்டத்தை புறக்கணித்தனர்.இது தொடர்பாக, நேற்றைய முன்தினம் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் வெளிநடப்பு செய்தது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து, வார்டு உறுப்பினர் அசோக் கூறியதாவது:வாடிப்பட்டி பேரூராட்சியில், வார்டு உறுப்பினர்கள் தலைமையில் வார்டு குழு சபை கூட்டம் அமைக்கப்பட வேண்டும் என்று, தமிழக அரசு ஆலோசனை வழங்கியுள்ளது. ஆனால், அந்த உத்தரவை மதிக்காமல், வாடிப்பட்டி பேரூராட்சி நிர்வாகம் சர்வாதிகார போக்குடன் தங்களுக்கு வேண்டியவர்களை நியமனம் செய்துள்ளது.

மேலும், எங்களுக்கு எதிராக தேர்தலில் தோற்றவர்களை நியமனம் செய்து குழப்பம் விளைவித்து வருகிறது.இதனை, மாவட்ட நிர்வாகமும் தமிழக அரசும் உடனடியாக விசாரித்து வார்டு பணிகள் முழுமையாக நடைபெற வார்டு உறுப்பினர் களுக்கு ஒத்துழைக்கும் குழு உறுப்பினர்களை நியமனம் செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம் என்று தெரிவித்தார்.

சோழவந்தான் பேரூராட்சியில் பேரூர்சபைக் கூட்டம்: மதுரை மாவட்டம்,சோழவந்தான் பேரூராட்சி எட்டாவது வார்டு குழு சபை உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது.

தமிழக அரசின் அறிவுறுத்தலுக்கு இணங்க மதுரை மாவட்டம், சோழவந்தானில் வார்டு உறுப்பினர் குழு சபை கூட்டம் நடைபெற்றது. சோழவந்தான் பேரூராட்சியின் எட்டாது வார்டில் நடைபெற்ற கூட்டத்திற்கு, சோழவந்தான் அரிமா சங்கத் தலைவரும், தொழிலதிபரும் வார்டு கவுன்சிலருமான டாக்டர் மருதுபாண்டியன் தலைமை வகித்தார். பேரூராட்சி இளநிலை உதவியாளர் கல்யாணசுந்தரம் முன்னிலை வகித்தார். இந்த சபை கூட்டத்தில் பேரூராட்சியின் எட்டாவது வார்டு பகுதிகளில் செய்ய வேண்டிய பணிகள் குறித்து பொதுமக்கள் எடுத்துரைத்தனர். பள்ளித்தலைமை ஆசிரியர், மக்கள் நல அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story