/* */

தக்காளி விலையால் சட்னி ஆன விவசாயிகள் : ஏரியில் கொட்டிய அவலம்

காவேரிப்பட்டினம் அருகே விலை வீழ்ச்சி எதிரொலியாக தக்காளியை ஏரியில் கூடை, கூடையாக விவசாயிகள் கொட்டி சென்றனர்.

HIGHLIGHTS

தக்காளி விலையால் சட்னி ஆன விவசாயிகள் :  ஏரியில் கொட்டிய அவலம்
X

கிருஷ்ணகிரியில் ட்ராக்டரில் இருந்து ஏரியில் கொட்டப்படும் தக்காளி.

காவேரிப்பட்டினம் அருகே விலை வீழ்ச்சி எதிரொலியாக தக்காளியை ஏரியில் கூடை, கூடையாக விவசாயிகள் கொட்டிச் சென்றனர்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ராயக்கோட்டை, தேன்கனிக்கோட்டை, ஓசூர் உள்ளிட்ட பகுதிகளில் அதிக அளவில் தக்காளி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இந்த பகுதிகளில் தக்காளி அறுவடை செய்யும் பணி நடக்கிறது. இதனால் மார்க்கெட்டுக்கு தக்காளி வரத்து அதிகரிக்க தொடங்கி உள்ளது. இங்கிருந்து தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களுக்கும், ஆந்திரா, கர்நாடகா, கேரளா ஆகிய வெளி மாநிலங்களுக்கும் தக்காளி கொண்டு செல்லப்படுகிறது.

இந்த நிலையில் சமீப காலமாக விளைச்சல் அதிகமாக இருந்ததால் தக்காளி விலை வீழ்ச்சி அடைந்து. ஒரு கிலோ தக்காளி ரூ.2 க்கும் குறைவாக விற்பனை செய்யப்பட்டது. இதனால், கவலை அடைந்த விவசாயிகள் இன்று காலை கிருஷ்ணகிரி அடுத்த காவேரிப்பட்டிணம் அருகே உள்ள நரிமேடு ஏரியில் தக்காளியை, கூடை, கூடையாக கொட்டி சென்றனர்.

இது குறித்து விவசாயிகள் கூறுகையில், தக்காளி விலை சமீப காலமாக வீழ்ச்சி அடைந்துள்ளது. எங்களுக்கு செலவு செய்த பணம் கூட கிடைப்பதில்லை. அறுவடை கூலி, போக்குவரத்து செலவு உள்ளிட்டவற்றிற்கு கையில் இருந்து கொடுக்க வேண்டிய நிலையே உள்ளது. விலை வீழ்ச்சியால் தக்காளியை அறுவடை செய்யாமல் தோட்டத்தில் விடவும் முடியவில்லை. நிலத்தை பராமரிக்க வேண்டி இருப்பதால் தக்காளியை அறுவடை செய்து, ஏரி மற்றும் சாலையோரம் கொட்டி வருகிறோம் என்று கவலையுடன் கூறினார்கள்.

Updated On: 15 May 2021 3:30 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  4. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  8. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?