/* */

கிருஷ்ணகிரி: விதைப்பண்ணை அமைக்க விவசாயிகளுக்கு அழைப்பு

நெல், சிறுதானியங்கள் பயிர்வகை பயிர்களில் விதைப்பண்ணை அமைக்க, கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

கிருஷ்ணகிரி: விதைப்பண்ணை அமைக்க விவசாயிகளுக்கு அழைப்பு
X

இது குறித்து, கிருஷ்ணகிரி மாவட்ட விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று உதவி இயக்குநர் அருணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பெய்யும் மழையினை கொண்டு நெல், சிறுதானியங்கள், பயிர் வகை மற்றும் நிலக்கடலை ஆகிய பயிர்கள் மூலமாக விதைப்பண்ணை அமைக்கலாம். இதை அமைக்க கருவிதைகள் மற்றும் ஆதார நிலை விதைகளை பயன்படுத்தலாம். இது, அனைத்து வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களிலும் கிடைக்கிறது.

விதை பண்ணை அமைக்க விரும்பும் விவசாயிகள், விதை வாங்கும் போது தங்கள் பெயரில் உரிய ரசீது பெற்று கொள்ள வேண்டும். விதை மூட்டைகளில் உள்ள கருவிதைகளுக்கான மஞ்சள் அட்டைகள் மற்றும் ஆதார விதைகளுக்கு உண்டான வெள்ளை நிற சான்று அட்டைகளை தனியே எடுத்து வைத்து கொள்ள வேண்டும்.

பதிவு செய்யப்பட்ட விதைப்பண்ணைகளை, விதைச்சான்ற அலுவலரால் பல்வேறு நிலைகளில், குறிப்பாக பூ பருவம் மற்றும் அறுவடை பருவம் ஆகிய நிலைகளில், வயல் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு காலப்படமற்ற, இனத்தூய்மையுள்ள, நல்ல முளைப்புத்திறன் உள்ள தரமான சான்று விதைகள் உற்பத்திக்கு வழிவகை செய்யப்படுகிறது.

கூடுதல் தகவல்களுக்கு அருகேயுள்ள வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தையோ அல்லது கிருஷ்ணகிரி விதைச்சான்று இயக்குநர் அலுவலகத்தையோ அணுகி, விதைப்பண்ணை அமைத்து, அதிக வருவாய் பெற்று பயனடையலாம் என்று தெரிவித்துள்ளார்.

Updated On: 30 Jun 2021 11:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?
  2. விளையாட்டு
    மும்பை இந்தியன்ஸ் ஆட்டம் குறித்து ரோஹித் ஷர்மாவின் முதல் எதிர்வினை
  3. சோழவந்தான்
    சோழவந்தான் திரௌபதி அம்மன் கோவிலில் கீசகன் வதம்
  4. லைஃப்ஸ்டைல்
    அரிதாய் கிடைத்த மனித பிறப்பை மகிழ்ந்து கொண்டாடுவோம் வாங்க..!
  5. லைஃப்ஸ்டைல்
    வீட்டின் தூண்களாய், உலகின் ஒளியாய் விளங்கும் மகளிர் தினச் சிறப்பு...
  6. காஞ்சிபுரம்
    தொடங்கியது வரதராஜ பெருமாள் திருக்கோயில் பிரம்மோற்சவம்
  7. லைஃப்ஸ்டைல்
    சிரிப்பும் சந்தோஷமும் நிறைந்த தமிழ் திருமண வாழ்த்துகள்!
  8. காஞ்சிபுரம்
    ஆதிசங்கரரின் உபதேசங்களை மொழிபெயர்க்க வேண்டும்..!
  9. லைஃப்ஸ்டைல்
    பெண்மை சக்தியைப் போற்றும் உலக மகளிர் தின வாழ்த்துக்கள்
  10. லைஃப்ஸ்டைல்
    பெண்மையை போற்றுவோம்..! வல்லமை வளரும்..!