/* */

போதை கணவனை செருப்பால் தாக்கிய மனைவி: சமூக வலைதளங்களில் வைரல்

கரூரில் மதுபோதையில் டாஸ்மாக் அருகே மயங்கி விழுந்த கணவனை, மனைவி செருப்பால் அடித்த காட்சி சமூக வலைதளங்களில் வைரல்.

HIGHLIGHTS

போதை கணவனை செருப்பால் தாக்கிய மனைவி:  சமூக வலைதளங்களில் வைரல்
X

போதையில் டாஸ்மாக் வாசலில் விழுந்த கணவனை செருப்பால் அடிக்கும் பெண்.

கரூர் தான்தோன்றிமலையில் உள்ள மதுபான கடைக்கு வந்த அதே பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் அளவுக்கு அதிகமாக குடித்துவிட்டு, மதுபாட்டிலுக்கு கூடுதலாக பணம் வாங்கிய மதுபான கடை விற்பனையாளரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது அவரை கடை ஊழியர்கள் அடித்ததாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து போதையில் மயங்கி சாலையிலேயே அந்த நபர் விழுந்தார்.

அருகில் இருந்தவர்கள், மயங்கி விழுந்த நபரை பற்றி அவரது மனைவிக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதையடுத்து டாஸ்மாக் கடை வாசலுக்கு வந்த அந்த நபரின் மனைவி போதையில் படுத்து கிடந்த கணவரை எழுப்ப முயன்றார். எழுப்ப முடியாத நிலையில் கோபமடைந்த அந்த பெண்மணி செருப்பை கழட்டி தன் கணவரை அடித்தார். இதைக் கண்ட அந்த பகுதியில் இருந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர். மனைவி அடித்ததில் அறைகுறையாக போதை தெளிந்த ஆசாமியை அவரது மனைவி இழுத்து சென்றார். இதை அந்தப் பகுதியில் இருந்த நபர்களால் செல்போன் மூலம் படம் எடுக்கப்பட்டு தற்சமயம் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

Updated On: 31 Aug 2021 10:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பொண்ணு மாப்பிள்ளையை வாழ்த்துவோம் வாங்க..!
  2. திருப்பரங்குன்றம்
    மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களில் பலத்த மழை: கொடைக்கானலில், படகு போட்டி...
  3. லைஃப்ஸ்டைல்
    'ஓருயிராய் வாழ்வோம் வா'..என அழைக்கும் திருமண வாழ்த்து..!
  4. ஆன்மீகம்
    வரும் வியாழன் அன்று வைகாசி விசாகம்; தமிழ் கடவுள் முருகனை வழிபடுங்க..!
  5. உலகம்
    சீனாவில் பள்ளிக்குள் புகுந்து குழந்தைகளை கத்தியால் குத்திய பெண்
  6. லைஃப்ஸ்டைல்
    உங்கள் பெயரின் முதல் எழுத்து ‘எஸ்’ என ஆரம்பிக்கிறதா? - ரொம்ப...
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    நூறு சதவீத கல்வி உதவி தொகையுடன் பட்டய படிப்பு குறித்த ஆலோசனை கூட்டம்
  8. ஈரோடு
    சித்தோடு அருகே அடுத்தடுத்து வந்த 3 கார்கள் ஒன்றன் பின் ஒன்றாக மோதி...
  9. லைஃப்ஸ்டைல்
    ரயில் பெட்டிகளில் வெள்ளை மற்றும் மஞ்சள் கோடுகள் இருப்பதை கவனித்து...
  10. லைஃப்ஸ்டைல்
    என்னுயிர் நண்பனுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!