சித்தோடு அருகே அடுத்தடுத்து வந்த 3 கார்கள் ஒன்றன் பின் ஒன்றாக மோதி விபத்து

சித்தோடு அருகே அடுத்தடுத்து வந்த 3 கார்கள் ஒன்றன் பின் ஒன்றாக மோதி விபத்து
X
Erode news- அடுத்தடுத்த வந்த கார்கள் ஒன்றன் பின் ஒன்றாக மோதி நின்றது.
Erode news- ஈரோடு மாவட்டம் சித்தோடு அருகே தேசிய நெடுஞ்சாலையில் அடுத்தடுத்து வந்த 3 கார்கள் ஒன்றன் பின் ஒன்றாக மோதி விபத்துக்குள்ளானது.

Erode news, Erode news today- சித்தோடு அருகே தேசிய நெடுஞ்சாலையில் அடுத்தடுத்து வந்த 3 கார்கள் ஒன்றன் பின் ஒன்றாக மோதி விபத்துக்குள்ளானது.

ஈரோடு மாவட்டம் சித்தோடு கோவை - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் நாள் ஒன்றுக்கு நூற்றுக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்நிலையில் இன்று காலை சித்தோடு அருகே ஆட்டையம்பாளையம் கோவை - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் லாரி ஒன்று முன்னாள் சென்று கொண்டிருந்தது. லாரிக்கு பின்னால் பல கார்கள் வந்து கொண்டிருந்தன.


அப்போது திடீரென லாரி டிரைவர் பிரேக் பிடித்து லாரியை நிறுத்தினார். இதை சற்றும் எதிர்பார்க்காமல் பின்னால் வந்த கார்கள் அடுத்தடுத்து மோதின. இவ்வாறாக 3 கார்கள் அடுத்தடுத்து மோதின. கார்களில் இருந்த ஏர்பேக் திறந்ததால் காரில் பயணித்தவர்களுக்கு பெரிய அளவில் காயம் ஏற்படவில்லை. லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

தகவல் அறிந்ததும் சித்தோடு போலீசார் மற்றும் போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து போக்குவரத்தை சரி செய்தனர். விபத்துக்குள்ளான கார்கள் ஜேசிபி இயந்திரம் மூலம் அகற்றப்பட்டன. இதனால் கோவை- சேலம் தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. இதுகுறித்து சித்தோடு போலீசார் விசாரிக்கின்றனர்.

Tags

Next Story
ai and future cities