நூறு சதவீத கல்வி உதவி தொகையுடன் பட்டய படிப்பு குறித்த ஆலோசனை கூட்டம்
திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார்.
நூறு சதவீத கல்வி உதவித்தொகையுடன் தொழில் முனைவோருக்கு பட்டய படிப்பு குறித்த ஆலோசனை கூட்டம் திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நாளை நடக்கிறது.
தமிழ்நாடு அரசு அகமதாபாத்தில் இயங்கி வரும் இ டி ஐ ஐ என்ற நிறுவனத்துடன் இணைந்து ஓராண்டு தொழில் முனைவோர் பயிற்சிக்கான பட்டய படிப்பு வழங்க உள்ளது .சென்னை இடிஐஐ தலைமையகத்தில் ஆண்டுக்கு 500 பேருக்கு பயிற்சி வழங்கப்படும்.இதற்கான கட்டணம் ஒரு லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த பட்டய படிப்புக்கான பாடத்திட்டம் மாணவர் சேர்க்கை விதிமுறைகள் மாணவர்கள் தேர்ச்சி குறித்து அந்நிறுவனமே முடிவு செய்யும்.
ஆங்கில மொழியில் பயிற்சி இருக்கும் என்பதால் ஆங்கில புலமை இல்லாதவருக்கு சிறப்பு பயிற்சியும் இந்நிறுவனம் வழங்கும். இதில் 21 முதல் 30 வயதுக்கு உட்பட்ட இளநிலை பட்டதாரிகள் சேரலாம். ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு உள் ஒதுக்கீடு செய்யப்படும். 100% கல்வி உதவித்தொகை பெற வழியுள்ளது இதில் பொருளாதாரத்தில் பின்தங்கியோர் பங்கு பெறலாம் இது குறித்த கூட்டம் திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நாளை (புதன்கிழமை) காலை மாலை 4 மணிக்கு நடைபெற உள்ளது .
கூடுதல் தலைமை செயலாளர் உமாசங்கர் பயிற்சி குறித்து உரையாற்றுகிறார். கூட்டத்தில் உயர்கல்வி நிறுவன பிரதிநிதிகள் சிறுகுறு தொழிற்சங்கங்கள் உட்பட முக்கிய பிரமுகர்கள் பங்கேற்க உள்ளனர்.என வே இந்த ஆலோசனை கூட்டத்தில் தொழில் ஆர்வலர்கள் பங்கேற்று பயனடையலாம் என திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் தெரிவித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu