/* */

போதை ஒழிப்பு விழிப்புணர்வு மராத்தான் போட்டி

karur News. karur News today- குளித்தலை அருகே கிருஷ்ணராயபுரத்தில், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில், போதை ஒழிப்பு விழிப்புணர்வு மராத்தான் போட்டி நடைபெற்றது.

HIGHLIGHTS

போதை ஒழிப்பு விழிப்புணர்வு மராத்தான் போட்டி
X

karur News. karur News today- மராத்தான் போட்டியில் பங்கேற்ற வீரர்கள்.

karur News. karur News today- கரூர் மாவட்டம், குளித்தலை அருகே கிருஷ்ணராயபுரத்தில், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் போதையை ஒழித்து வேலை வாய்ப்பை உருவாக்க போதைக்கு எதிராகவும், போதை இல்லா சமுதாயத்தை உருவாக்கிட வேண்டும், மத்திய அரசு அளித்த வாக்குறுதியின்படி 2 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பினை உருவாக்கிட வேண்டும் என வலியுறுத்தி மராத்தான் ஓட்ட போட்டி நடைபெற்றது.

இதில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 25க்கும் மேற்பட்ட ஓட்டப்பந்தய வீரர்கள் கலந்து கொண்டனர். இந்த போட்டியை, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாநில செயலாளர் சிங்காரவேலன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

கிருஷ்ணராயபுரம் பஸ் ஸ்டாண்ட் அருகே தொடங்கிய மராத்தான் ஓட்ட போட்டி, 7 கிலோமீட்டர் தூரம் வரை சென்று பழைய ஜெயங்கொண்டம் நான்கு ரோட்டில் முடிவடைந்தது.

இந்த மராத்தான் போட்டியில் முதல் பரிசை, சேலத்தைச் சேர்ந்த அரவிந்தன், 2ம் பரிசை பாலக்காட்டைச் சேர்ந்த ஆல்வின், 3ம் பரிசை திருவண்ணாமலையைச் சேர்ந்த சக்திவேல், 4ம் பரிசை கொடுமுடியைச் சேர்ந்த தயானந்த், 5ம் பரிசை சித்தலவாயை சேர்ந்த வல்லரசு ஆகியோர் தட்டிச் சென்றனர். வெற்றி பெற்ற வீரர்கள், விழா அமைப்பினர் பரிசு வழங்கி பாராட்டினர்.

இதே போல், கரூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் புத்தாண்டை முன்னிட்டு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டது. பல்வேறு பொது அமைப்புகள் சார்பில் நடத்தப்பட்ட விளையாட்டு போட்டிகளில், ஆர்வமுடன் பங்கேற்று விளையாடினர். வெற்றி பெற்றவர்களுக்கு பல்வேறு பரிசு வழங்கப்பட்டது.

மேலும், புத்தாண்டையொட்டி கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. இதில், ஏராளமான பக்தர்கள் குடும்பத்துடன் வந்து, வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

Updated On: 1 Jan 2023 10:10 AM GMT

Related News

Latest News

  1. திருவண்ணாமலை
    பெண்களின் முன்னேற்றத்திற்கு சிறந்த சேவை புரிந்த சமூக சேவகர்களுக்கு...
  2. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  3. செய்யாறு
    செய்யாறு அருகே பல்லவர் கால கொற்றவை சிலை கண்டெடுப்பு
  4. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை ஏடிஎஸ்பி பணி ஓய்வு: பாராட்டி வழியனுப்பி வைப்பு
  5. ஈரோடு
    கோபி அருகே விபசாரம் நடத்திய பெண் கைது: ஒருவர் மீட்பு
  6. ஆன்மீகம்
    வார ராசிபலன் 02 முதல் 08 ஜூன் 2024 வரை அனைத்து ராசியினருக்கும்
  7. லைஃப்ஸ்டைல்
    பாலுடன் இந்த உணவு பொருட்களை சாப்பிடாதீங்க!
  8. லைஃப்ஸ்டைல்
    ருசியான கோதுமை முறுக்கு செய்வது எப்படி?
  9. வீடியோ
    இந்த படம் கிடைச்சது ரொம்ப சந்தோஷம் Vidharth !! || #anjaamai #Vidharth...
  10. லைஃப்ஸ்டைல்
    சருமம் மற்றும் கூந்தல் இரண்டையும் பளபளப்பாக மாற்ற என்ன செய்யணும்...