/* */

நகர்புற உள்ளாட்சி தேர்தல் : பாஜக சார்பில் போட்டியிட விருப்பமனு

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட விருப்பமனுவை தேர்தல் பொறுப்பாளரிடம் அளித்தனர்

HIGHLIGHTS

நகர்புற உள்ளாட்சி தேர்தல் : பாஜக சார்பில் போட்டியிட விருப்பமனு
X

பாஜக சார்பில் தேர்தலில் போட்டியிட விருப்பமனு அளித்தனர்

தமிழகத்தில் விடுபட்ட 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் கடந்த மாதம் நடைபெற்றது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள காஞ்சிபுரம் , உத்திரமேரூர், ஸ்ரீபெரும்புதூர், வாலாஜாபாத் , குன்றத்தூர் ஆகிய ஐந்து ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள கிராம ஊராட்சி தலைவர் ஒன்றியக்குழு உறுப்பினர் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் நடைபெற்று அனைவரும் தற்போது உள்ளாட்சி பணிகளை நிர்வகித்து வருகின்றனர்.

இந்நிலையில் மீதமுள்ள பேரூராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சி கான ஊரக உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது இதற்கான ஆயத்த பணிகளை நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்ட பாஜக சார்பில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விருப்பம் உள்ளவர்கள் இன்று முதல் விருப்ப மனுக்களை அந்தந்த பொறுப்பாளர்களிடம் அளிக்கலாம் என பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்திருந்தார்.

அவ்வகையில் இன்று காஞ்சிபுரம் தனியார் ஹோட்டலில் நடைபெற்ற நிகழ்வில் மாவட்ட பொறுப்பாளராக நியமிக்கப் பட்டுள்ள முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திருமதி டாக்டர் .காயத்ரி தேவி கலந்துகொண்டார்.

காஞ்சிபுரம் மாநகராட்சியில் போட்டியிட விருப்பம் உள்ள நபர்கள் மற்றும் ஸ்ரீபெரும்புதூர், உத்தரமேரூர், வாலாஜாபாத் ஆகிய பேரூராட்சிகளில் போட்டியிட விரும்பிய நிர்வாகிகள் வேட்பு மனுவை பெற்றுக்கொண்டு அதனை பூர்த்தி செய்து கட்டணத்துடன் மாவட்ட தலைவர் பாபு மற்றும் பொறுப்பாளர் டாக்டர் காயத்ரி தேவியிடம் வழங்கினர்.

இந்நிகழ்ச்சியில் பாஜக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்

Updated On: 21 Nov 2021 8:35 AM GMT

Related News