/* */

காஞ்சிபுரம் மாவட்டத்தில் தரமற்ற ஏரி சீரமைப்பு பணிகள்: பாஜக ஆர்ப்பாட்டம்

காஞ்சிபுரம் அடுத்த திருப்பருத்திக்குன்றம் ஊராட்சியில் ஏரி புனரமைப்பு பணி தரமற்ற முறையில் இருப்பதாக பாஜகவின் குற்றச்சாட்டி வருகின்றனர்.

HIGHLIGHTS

காஞ்சிபுரம் மாவட்டத்தில் தரமற்ற ஏரி சீரமைப்பு பணிகள்: பாஜக ஆர்ப்பாட்டம்
X

திருப்பருத்திகுன்றம் ஏரி புனரமைப்பு பணியில் தரமற்ற பணிகளை மேற்கொள்வதாக கூறி காஞ்சிபுரம் மாவட்ட பாஜக தலைவர் பாபு தலைமையில் வட்டாட்சியர் அலுவலகம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழக அரசின் பொதுப்பணித்துறை சார்பில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடைபெறும் தரமற்ற ஏரி சீரமைப்பு பணிகளையும் முறைகேடுகளையும் கண்டித்து பாரதிய ஜனதா கட்சி சார்பில் காஞ்சி மாவட்ட தலைவர் பாபு தலைமையில் காஞ்சிபுரத்தில் நடைபெற்றது.

ஏரிகள் நிறைந்த மாவட்டம் எனக் கூறப்படும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் பொதுப்பணி துறையின் கட்டுப்பாட்டில் 381 ஏரிகள் உள்ளது கடந்த வடகிழக்கு பருவமழை மாண்டோஸ் புயல் நேரத்தில் மாவட்டத்தில் உள்ள 274 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியது.

எரி முழு கொள்ளளவை எட்டிய நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் விவசாயம் பணிகள் துவங்கியது. இந்நிலையில் தம்மனூர் உள்ளிட்ட சில கிராம ஏரிகளின் கரைகள் கலங்கல்கள் சேதம் அடைந்து நீர் வெளியேறி விவசாயிகளுக்கு ஏமாற்றத்தை அளித்தது.

மேலும் பல ஏரியில் புனரமைப்பு பணிகள் சரிவர மேற்கொள்ளவில்லை என பல்வேறு தரப்பினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் தெரிவித்து வருகின்றனர்.

இந்தப் பணிகளை குறிப்பாக ஆளும் திமுக அரசு பொதுப்பணி துறையின் மூலம் மாவட்டங்கள் தோறும் பல கோடி ரூபாய் செலவில் ஏரிகளை தூர்வாரி சீரமைக்கும் பணிகளை தரமற்ற முறையில் செய்து முறைகேட்டில் ஈடுபட்டு வருகிறது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பொதுப்பணி துறையின் சார்பில் 30 ஏரிகளில் தரமற்ற முறையில் சீரமைப்பு பணிகளையும் முறைகேடுகளையும் கண்டித்து காஞ்சிபுரம் தாலுகா அலுவலகம் அருகே காஞ்சிபுரம் மேற்கு ஒன்றியம் பாஜக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பாஜக காஞ்சிபுரம் மேற்கு ஒன்றிய துணைத் தலைவர் தமிழரசன் தலைமையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் பாஜக மாவட்ட தலைவர் கே எஸ் பாபு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கண்டன சிறப்புரை ஆற்றினார்.

விரைவில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடைபெற்ற ஊழல்களை பாஜக வெளிக்கொணரும் எனவும் இனி எந்த ஒரு பணிகளையும் தரமற்ற முறையில் செய்ய காஞ்சிபுரம் மாவட்ட பாஜக அனுமதிக்காது.

மத்திய அரசு ஒதுக்கும் நிதியை முறைகேடு செய்யும் ஆளும் கட்சியின் செயலை கண்டிக்கும் வகையில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் மாவட்ட ஆட்சியிடம் மனு அளித்தல் உள்ளிட்டவைகளை மேற்கொள்ளும் எனவும் தெரிவித்தார்.

கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட பாஜக துணை செயலாளர் செந்தில்குமார் , பாஜக மாவட்ட பொதுச் செயலாளர் டி வாசன் , மாவட்ட துணைத் தலைவர்கள் கூரம் விஸ்வநாதன் , காஞ்சிபுரம் நகர மேற்கு மண்டல தலைவர் ஜீவானந்தம் ஞானசூரியன் உள்ளிட்ட கட்சியின் பல்வேறு அணிகளின் முக்கிய நிர்வாகிகளும், தொண்டர்களும் என நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு தமிழகத்தில் ஆளும் திமுக அரசை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Updated On: 13 Feb 2023 12:00 PM GMT

Related News