/* */

பொதுத்தேர்வை புறக்கணித்த மாணவ, மாணவிகள்: அதிர்ச்சியில் கல்வித்துறை..!

+2 பொது தேர்வை185 மாணவிகளும் , 10. வகுப்பு தேர்வை 370 மாணவ, மாணவிகள் தவிர்த்தது கல்வி ஆர்வலர்கள் மற்றும் கல்வித்துறையின் கிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

HIGHLIGHTS

பொதுத்தேர்வை புறக்கணித்த மாணவ, மாணவிகள்: அதிர்ச்சியில்  கல்வித்துறை..!
X

காஞ்சிபுரம் அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் தேர்வுக்கு முன் கூடி இருந்த மாணவிகள் ( கோப்பு படம் ) 

தமிழகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக பள்ளி மாணவர்கள் தேர்வுகளை சந்திக்காமல் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். இந்நிலையில் இந்த கல்வியாண்டு ஆன்லைன் வகுப்புகள் மூலம் நடைபெற்று கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் நேரடி பள்ளி வகுப்புகள் அரசு வழிகாட்டி நடைமுறைகள்‌ மூலம் நடைபெற்று வந்தது.

இந்நிலையில் பள்ளி கல்வி துறை சார்பில் அரசு பொது தேர்வுகள் நேற்று முதல் துவங்கியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் நேற்று +2 தேர்வு துவங்கியது . இதில் 13699 மாணவ , மாணவிகள் தேர்வு எழுத நுழைவு சீட்டு பள்ளிகள் மூலம் அளிக்கப்பட்டது. இதில் 13375 மாணவ, மாணவிகள் மட்டுமே தேர்வு எழுதினர். 324 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதவில்லை. இதில் மாணவர்கள்139 பேரும் , 185 மாணவிகள்‌என்பது குறிப்பிடதக்கது.

இதேபோல் இன்று பத்தாம் வகுப்பு அரசு பொதுத் தேர்வு துவங்கிய நிலையில் 16,243 பேருக்கு நுழைவு சீட்டுகள். வழங்கினர். இதில் 15,873 பேர் மட்டுமே தேர்வு எழுத வந்தனர். இத்தேர்வை 370 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதவில்லை. மாணவ , மாணவிகள்‌தேர்வை புறக்கணித்து கல்வி ஆர்வலர்கள், பள்ளி கல்வித்துறை அலுவலர்களுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது.

பெண் கல்வியை ஊக்குவிக்க பல்வேறு திட்டங்களை அரசு அறிவித்தும் , கல்வி‌ இடை நிற்றலை தவிர்க்க ஆசிரியர்கள் மாணவ, மாணவிகளுக்கு ஆலோசனை , அறிவுரை வழங்கிய போதும் குறிப்பாக மாணவிகள் தேர்வு‌ எழுத வராதது மன வருத்தத்தை அளித்துள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்‌கூட அரசு பெண்களுக்கு ஊக்க தொகை அறிவித்தது என்பதும் , தேர்வு எழுதாதது குறித்து பள்ளிகள் மூலம் இதன் காரணத்தை அறிய வேண்டும். குறிப்பாக எஸ்.சி , எஸ்.டி மாணவர்கள் இடை நின்றவை தவிர்க்க பள்ளி கட்டணத்தை கூட பல தலைமை ஆசிரியர்கள் கட்டி மாணவர்களை அழைத்தால் கூட பெற்றோர்கள் ஒத்துழைப்பு தருவதில்லை என ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.

அரசு வேலைவாய்ப்புக்கு அடிப்படை தகுதியாக பத்தாம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு மற்றும் கல்லூரி பட்டப் படிப்பு என தற்போது விதிமுறைகள் இருக்கும் நிலையில் இவர்கள் தேர்வை புறக்கணித்தது அதிர்ச்சி அளிக்கிறது.

Updated On: 7 May 2022 6:50 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    பரசுராம் ஜெயந்தி 2024 - நாள், நேரம், சிறப்புகள் என்னென்ன தெரியுமா?
  2. சோழவந்தான்
    சோழவந்தான் அருகே ,தென்கரை உச்சி மாகாளியம்மன் ஆலய விழா..!
  3. வீடியோ
    Vijay-யுடன் ரகசிய சந்திப்பு | வெளிப்படையாக பதில் சொன்ன Seeman |...
  4. லைஃப்ஸ்டைல்
    குழந்தையின் முதல் பிறந்தநாளா.. பெற்றோருக்கு கூறும் வாழ்த்துகள்
  5. காஞ்சிபுரம்
    சிலாம்பாக்கம் தடுப்பணை பணிகள் 50சதவீதம் நிறைவு..!.
  6. இராஜபாளையம்
    இராஜபாளையம் அருகே ,போலீஸாரிடமிருந்து தப்பிக்க முயன்றவர்களுக்கு கை,...
  7. லைஃப்ஸ்டைல்
    திரும்பத் திரும்பக் காய்ச்சும் பால்: நன்மையா? தீமையா?
  8. லைஃப்ஸ்டைல்
    நகைச்சுவையான பிறந்தநாள் வாழ்த்துகளின் தொகுப்பு..!
  9. காஞ்சிபுரம்
    பள்ளி பேருந்தில் பயணிப்போர் நம் குழந்தைகள் என எண்ண வேண்டும்..!
  10. வீடியோ
    🔴LIVE: சீமான் செய்தியாளர் சந்திப்பு | #Seeman #NTK #SrilankanTamils...