/* */

காஞ்சிபுரத்தில், ஆற்றங்கரையோர வீடுகளை இடிக்க மக்கள் கடும் எதிர்ப்பு: கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு..!

காஞ்சிபுரத்தில், ஆற்றங்கரையோர வீடுகளை இடிக்க மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தியதால் பரபரப்பு நிலவியது.

HIGHLIGHTS

காஞ்சிபுரத்தில், ஆற்றங்கரையோர வீடுகளை இடிக்க மக்கள் கடும் எதிர்ப்பு: கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு..!
X

காஞ்சிபுரத்தில், வேகவதி கரையோரம் இருக்கும் வீடுகளை மாவட்ட நிர்வாகம் அகற்றக்கூடாது‌ என கவன ஈர்ப்பு கோரிக்கை கூட்டம் நடைபெற்றது. இதில், கலந்து கொண்ட குடியிருப்புவாசிகள்.

காஞ்சிபுரம் நகரில், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே வேகவதி ஆறு செல்கிறது. இந்த ஆற்றின் கரையோரம்‌ சுமார் 5ஆயிரம் குடியிருப்புகள் அமைந்துள்ளன. பெரும் மழை காலங்களில் கால்வாய் பாதையில் அடைப்பு ஏற்பட்டு குடியிருப்புகளுக்குள் நீர் புகுந்து அச்சம் ஏற்படுத்துகிறது. இதை தவிர்க்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இந்நிலையில் நீர் நிலைகள், ஆக்கிரமிப்புகளை அகற்ற நீதிமன்றம் அனைத்து மாவட்ட நிர்வாகத்திற்கும் உத்தரவிட்டதின் பேரில் இப்பகுதி குடியிருப்பு வாசிகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது. ஆற்றங்கரையோரம் குடியிருப்பு வாசிகள் வீடுகளை குடியிருப்போர் சம்மதம் இல்லாமல் இடிக்கமாட்டோம் என தமிழக முதல்வர் அறிவித்துள்ளார்.

இந்த அறிவிப்பிற்கு எதிராக காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம் செயல்படுவதாக கூறி, காஞ்சிபுரத்தில் சி.பி.ஐ (எம்) கட்சி சார்பில் கோரிக்கை கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் காவலான் கேட் அருகே நடைபெற்றது. இந்த போராட்டத்திற்கு காஞ்சி நகர செயலாளர் ஸ்ரீதர் தலைமையில் வகித்தார். சி.பி.ஐ (எம்) மாநிலக் குழு உறுப்பினர் முத்துக்குமார், மாவட்ட செயலாளர் சங்கர் ஆகியோர் கலந்து கொண்டு குடியிருப்புவாசிகள் மத்தியில் பேசினர். இந்த கவன ஈர்ப்பு கூட்டத்தை முன்னிட்டு அசம்பாவிதங்களை தடுக்க முன்னெச்சரிக்கையாக, காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.



Updated On: 18 Jun 2022 6:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    திருமணத்தில் ஆண்கள் - பெண்கள் எவ்வளவு வயது வித்யாசம் இருக்கலாம்?
  2. லைஃப்ஸ்டைல்
    உடலுக்கு இரும்பு போன்ற வலிமை வேண்டுமா? கம்பு லட்டு சாப்பிடுங்க!
  3. லைஃப்ஸ்டைல்
    வீடுகளில் சிலைகளை வைத்திருக்கிறீர்களா? - இந்த விஷயங்களை...
  4. லைஃப்ஸ்டைல்
    முட்டைகளை பிரிட்ஜில் வைக்கலாமா? கூடாதா?
  5. இந்தியா
    மைசூருவில் பெண்ணின் உடலை 200 மீட்டர் காட்டுக்குள் இழுத்துச் சென்ற...
  6. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் குளியலறை எந்த திசையில் இருக்க வேண்டும் என்று தெரியுமா?
  7. லைஃப்ஸ்டைல்
    சுவை மிகுந்த மீல் மேக்கர் கிரேவி செய்வது எப்படி?
  8. உலகம்
    வரும் 28ல் உலக பட்டினி தினம் - பசி இல்லாத ஒரு உலகை படைத்திடுவோம்!
  9. விளையாட்டு
    கரூர் அகில இந்திய கூடைப்பந்து போட்டி: நாளை இறுதி போட்டி
  10. வணிகம்
    நாளை உலக மார்க்கெட்டிங் தினம்..! வியாபாரத்துக்கு அது முக்கியமுங்க..!