11ம் வகுப்பு தேர்வில் அரசு பள்ளி மாணவர்கள் சாதனை

11ம் வகுப்பு தேர்வில் அரசு பள்ளி  மாணவர்கள் சாதனை

(கோப்புப் படம்).

11ம் வகுப்பு தேர்வில் குமாரபாளையம் அரசு பள்ளி மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர்.

11ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. இதில் குமாரபாளையம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவியர் 92 சதவீதம் தேர்ச்சி பெற்றனர். மதிப்பெண்கள் 570 முதலிடம், 556 இரண்டாமிடம், 549 மூன்றாமிடம் பெற்று சாதனை படைத்தனர். 195 பேர் தேர்வு எழுதியதில் 180 பேர் தேர்ச்சி பெற்றனர். சாதனை படைத்த மாணவியர்களை தலைமை ஆசிரியை உள்ளிட்ட ஆசிரிய பெருமக்கள், மாணவியர் பலரும் பாராட்டினர்.

அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவர்கள் 536 முதலிடம், 487 இரண்டாமிடம், 472 மூன்றாமிடம் மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்தனர். 216 பேர் தேர்வு எழுதியதில் 167 பேர் தேர்ச்சி பெற்றனர். அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களை தலைமையாசிரியர் ஆடலரசு உள்பட ஆசிரிய பெருமக்கள், மாணவர்கள் பலரும் பாராட்டினர்.

Tags

Read MoreRead Less
Next Story