/* */

காஞ்சிபுரத்தில் கன மழை காரணமாக மழை நீர் வடிகால் பணிகளை மேயர் ஆய்வு

காஞ்சிபுரம் மாவட்டத்தில் அதிகாலை முதல் பல்வேறு பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. சரசரியாக 22 மீ.மீ மழை பதிவாகியுள்ளது.

HIGHLIGHTS

காஞ்சிபுரத்தில் கன மழை காரணமாக மழை நீர் வடிகால் பணிகளை மேயர் ஆய்வு
X

காஞ்சிபுரம் சேக்குப்பேட்டை பி.எஸ். கே தெருவில் சாலை மற்றும் வீடுகளில் தேங்கி இருந்த நீரை அகற்ற பார்வையிட்டு ஆலோசனை மேற்கொண்ட மேயர் மகாலட்சுமி யுவராஜ்.

தமிழகத்தில் காற்று திசையின் மாறுபாடு காரணமாக பல்வேறு மாவட்டங்களில் வரும் நான்கு நாட்களுக்கு மிதமானது முதல் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மண்டல ஆய்வு மையம் அறிவித்திருந்தது.

அவ்வகையில் நேற்று காஞ்சிபுரம் மாவட்டத்தில் இரவு 11 மணி முதல் லேசான இடியுடன் கூடிய மழை சிறிது நேரத்தில் கனமழையாக ஒரு மணி நேரம் இடித்தது.

அதன்பின் மீண்டும் இரண்டு மணி அளவில் சாரல் வழியாக துவங்கி கனமழையாக 45 நிமிட நேரம் நீடித்து சாலைகளில் வெள்ள நீர் வழிந்து ஓடியது.

காஞ்சிபுரம் மாவட்ட பேரிடர் மேலாண்மை மையம் அளித்த தகவலின் படி , காஞ்சிபுரத்தில் நேற்று இரவு மட்டும் 54.6 மில்லி மீட்டர் , உத்தரமேரூரில் 26 மில்லி மீட்டரும் , வாலாஜாபாத்தில் 41 மில்லி மீட்டர் , குன்றத்தூர் 7.5 மில்லி மீட்டர் , ஸ்ரீபெரும்புதூரில் ஒரு மில்லி மீட்டர் மழை என சரியாக 22.18 மில்லி மீட்டர் காஞ்சிபுரம் மாவட்டத்தில் மழை பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

கனமழை காரணமாக நள்ளிரவு முதல் அதிகாலை வரை குளிர்ச்சியான காற்று நீடித்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். அதிகாலை தொழிற்சாலையில் செல்லும் பணியாளர்கள் சாரல் மலையில் நனைந்தபடியே தங்கள் பணிக்கு பேருந்துகள் மூலம் சென்றனர்.

இந்நிலையில் காஞ்சிபுரத்தில் 54.6 மில்லி மீட்டர் மழை பதிவாகியதால் சாலையில் முழுவதும் பல்வேறு இடங்களில் நீர் தேங்கி இருந்தது. மாநகராட்சி பணியாளர்கள் காலையிலே சாலையில் தேங்கி இருந்த நீரை வெளியேற்றும் பணிகளில் ஈடுபட்டனர்.

இவர்களுடன் காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் மகாலட்சுமி ஊராட்சி மாமன்ற உறுப்பினர் சந்துரு உள்ளிட்டோர் காந்தி சாலை , ராஜாஜி காய்கறி சந்தை , சேக்குப்பேட்டை தெரு , பேருந்து நிலையம் என பல பகுதிகளில் நேரடியாக ஆய்வு மேற்கொண்டு சாலைகள் தேங்கும் நீர் அகற்றும் பணிக்கு ஆலோசனை வழங்கினர்.

அப்போது சேக்குப்பேட்டை தெருவில் பல்வேறு வீடுகளில் கழிவுநீர் வெளியேறாமல் வழிந்து ஓடுவதாக மாநகராட்சி மேயரிடம் புகார் தெரிவித்ததன் பேரில் , பொறியாளர் மற்றும் அப்பகுதி மாமன்ற உறுப்பினர் உள்ளிட்டோரை அழைத்து ஆலோசனை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என பொதுமக்களிடம் தெரிவித்தார்.

மாவட்டத்தில் பெய்த திடீர் மழை காரணமாக அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் வைத்திருந்த நெல் மூட்டைகள் சிறிதளவு நீரில் நனைந்து சேதம் அடைந்தது.

மேலும் காலை முதலே காஞ்சிபுரம் மாவட்டத்தில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சியுடனும் , திடீர் மழை விவசாயிகளுக்கு சற்று ஆறுதலை வந்துள்ளது.

மேலும் மாவட்டத்தின் கண்டறியப்பட்ட பல்வேறு பகுதிகளில் வடகிழக்கு பருவ மழை எச்சரிக்கை முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாலும் மழைநீர் தேங்காமல் எவ்வித இடையூறு இன்றி நீர் செல்லும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Updated On: 6 Oct 2022 11:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    புத்தாண்டு நல்வாழ்த்துகள்: வாழ்க்கையை வண்ணமயமாக்கும் பொன்மொழிகள்
  2. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் இரண்டு மணி நேரம் கொட்டிய கனமழை
  3. வீடியோ
    நாடாளுமன்றத்துக்கு வந்தது புதிய படை!அப்படி என்ன சிறப்பு ! || #crpf...
  4. லைஃப்ஸ்டைல்
    அறுபதாம் அகவை வாழ்த்துக்கள்: ஒரு புதிய அத்தியாயத்தின் ஆரம்பம்
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு வாழும் கூடு..! புதுமனை புகுவிழா வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் இனிய பாடலுக்கு இதயப்பூர்வமான வாழ்த்துகள்
  7. குமாரபாளையம்
    சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
  8. ஈரோடு
    சென்னிமலையில் வீடுகளுக்குள் புகுந்த மழை வெள்ளம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    சுருங்க சொல்லி விளங்க வைக்கிறேன்..! SMS பிறந்தநாள் வாழ்த்து..!
  10. குமாரபாளையம்
    அரசு அனுமதியின்றி செயல்பட்ட பார் மூடல்; கலெக்டர் உத்தரவு