/* */

பச்சையப்பன் கிளை இடைநிலைப் பள்ளியில் மணிமண்டபத்துடன் பச்சையப்பன் சிலை திறப்பு

உயர்நீதி மன்ற நீதிபதி கலந்து கொண்டு மணி மண்டபத்துடன் அமைந்துள்ள பச்சையப்பர் சிலையினை திறந்து மரியாதை செலுத்தினார்.

HIGHLIGHTS

பச்சையப்பன் கிளை இடைநிலைப் பள்ளியில் மணிமண்டபத்துடன் பச்சையப்பன் சிலை திறப்பு
X

சின்ன காஞ்சிபுரம் பச்சையப்பன் கிளை இடைநிலைப் பள்ளியில் நிறுவப்பட்ட  மணி மண்டபத்துடன் கூடிய பச்சையப்பன் உருவச்சிலைக்கு சென்னை உயர்நீதி மன்ற நீதியரசர் எம். துரைசாமி திறந்து வைத்து மலர்மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

சின்ன காஞ்சிபுரம் பகுதியில் கடந்த 1907 ஆம் ஆண்டு கல்வி வள்ளல் பச்சையப்பன் கிளை இடைநிலைப் பள்ளியினை தொடங்கினார். இப்பள்ளியில் பேரறிஞர் அண்ணா கல்வி பயின்று குறிப்பிடதக்கது. ஏழை எளிய மாணவர்கள் தற்போதும் கல்வி பயின்று வருகின்றனர். இப்பள்ளி தமிழக அரசின் உதவி பெறும் பள்ளிகளில் ஓன்றாக உள்ளது..

இந்நிலையில் இப்பள்ளி வளாகத்தில் மணிமண்டபத்துடன் கூடிய பச்சையப்பர் சிலை நிறுவப்பட்டது. இதனை சென்னை உயர்நீதி மன்ற நீதியரசர் எம். துரைசாமி திறந்து வைத்து மலர்மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.இதனை தொடர்ந்து தமிழ்நாடு அரசு பேராட்சியர் மற்றும் பொறுப்பு சொத்தாட்சியர் நிர்வாகி ராஜூ மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பச்சையப்பன் ஆடவர் , மகளிர் கல்லூரி முதல்வர்கள் , பேராசிரியர்கள் , பச்சையப்பன் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், கிளை இடைநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் உள்ளிட்ட பலர் உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர் .


Updated On: 7 Aug 2022 5:15 AM GMT

Related News

Latest News

  1. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. நீலகிரி
    கோடை சீசன் துவக்கம். நீலகிரியில் போக்குவரத்து மாற்றம்!
  3. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  4. மாதவரம்
    கார் ஓட்டுநரிடம் கத்தியைக் காட்டி பணம் பறித்த மூவர் கைது
  5. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  6. ஆரணி
    திருவண்ணாமலை மாவட்டத்தில் மே தின கொண்டாட்டங்கள்
  7. ஈரோடு
    கோடை வெயில்: ஈரோட்டில் ஒரு எலுமிச்சை பழம் ரூ.25-க்கு விற்பனை
  8. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்டத்தில் தொமுச சார்பில் மாபெரும் மே தின ஊர்வலம்
  9. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 46 கன அடியாக சரிவு
  10. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 27 கன அடியாக சரிவு