கோடை வெயில்: ஈரோட்டில் ஒரு எலுமிச்சை பழம் ரூ.25-க்கு விற்பனை

கோடை வெயில்: ஈரோட்டில் ஒரு எலுமிச்சை பழம் ரூ.25-க்கு விற்பனை
X

எலுமிச்சை பழங்கள்.

கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால், ஈரோட்டில் ஒரு எலுமிச்சை பழம் ரூ.25 வரை விற்பனை செய்யப்படுகிறது.

கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால், ஈரோட்டில் ஒரு எலுமிச்சை பழம் ரூ.25 வரை விற்பனை செய்யப்படுகிறது.

தமிழ்நாட்டிலேயே ஈரோட்டில் தான் அதிக அளவில் வெயில் பதிவாகி வருகிறது. இதனால், பகல் நேரத்தில் அனல் காற்று வீசுவதால், சாலைகள் மற்றும் வீதிகளில் ஆட்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி கிடக்கிறது. மேலும், இருசக்கர வாகனங்களில் வெளியே சென்றால் முகத்தில் வெந்நீரை ஊற்றியது போல் உள்ளது.

வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் உடலுக்கு குளிச்சி தரும் உணவுகளை எடுத்து வருகின்றனர். குறிப்பாக பழச்சாறு, கம்பங்கூழ், எலுமிச்சைச் சாறு போன்றவற்றை தினந்தோறும் குடித்து வருகின்றனர். இந்நிலையில், ஈரோடு நேதாஜி தினசரி காய்கறி மார்க்கெட்டுக்கு தினமும் 4 டன் வரை வரத்தான எலுமிச்சை பழம், தற்போது ஒரு டன்னுக்கும் குறைவாகவே வருகிறது.

வெயிலின் தாக்கம் மற்றும் வரத்து குறைவு எதிரொலியாக எலுமிச்சை பழம் கிடுகிடுவென விலை உயர்ந்துள்ளது. நேற்று ஒரு கிலோ ரூ.210-க்கு விற்பனை ஆனது. இதேபோல், ஒரு எலுமிச்சை பழம் ரூ.6, ரூ.7-க்கு விற்பனையான நிலையில் , தற்போது ரூ.20 முதல் ரூ.25 வரை விற்பனை செய்யப்படுகிறது.

Tags

Next Story
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் : கர்நாடகா பெண் வேட்பு மனு ஏற்கப்பட்ட சர்ச்சையால்,  பட்டியல் வெளியிட தாமதம்