/* */

கூட்டுறவு சங்கங்களில் உர விற்பனை விலை அதிகம் என விவசாயிகள் குற்றச்சாட்டு

காஞ்சிபுரத்தில் நடந்த விவசாயிகள் நலன் காக்கும் கூட்டத்தில் கூட்டுறவு சங்கங்களில் உர விற்பனை விலை அதிகம் என விவசாயிகள் குற்றச்சாட்டினர்.

HIGHLIGHTS

கூட்டுறவு சங்கங்களில் உர விற்பனை விலை அதிகம் என விவசாயிகள் குற்றச்சாட்டு
X

விவசாயிகள் நலன் காக்கும் கூட்டத்தில் கூட்டுறவு சங்கங்களில் உர விற்பனை விலை அதிகமாக உள்ளது என ஆதாரத்துடன் குற்றம் சாட்டிய விவசாயி

விவசாயிகளின் மனுக்களுக்கு சரியாக பதில் அளிக்க மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன், விவசாயிகள் நலன் காக்கும் கூட்டத்தில் அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்.

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள கூட்டரங்கில் விவசாயிகள் அதன் காக்கும் கூட்டம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் தலைமை நடைபெற்றது.

காஞ்சிபுரம் மாவட்ட வேளாண் துறை இணை இயக்குனர் சுரேஷ் மாவட்டத்தின் வேளாண்துறை அறிக்கை வாசித்தார்.இதனைத் தொடர்ந்து விவசாயிகள் அளித்த மனுக்களின் நிலை குறித்து ஒவ்வொன்றாக விளக்கப்பட்டது. மேலும் அம்மனுவின் தற்போதைய நிலை குறித்து மனுதாரருக்கு அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.

இதனைத் தொடர்ந்து விவசாயிகள் கூட்டத்தில் பேசுகையில் , காஞ்சிபுரம் மாவட்டத்தில் கூட்டுறவு சங்கங்கள் உரங்கள் போதிய இருப்பு இருந்தும் அதன் விலை தனியார் விட அதிகமாக உள்ளதாகவும், விவசாயிகள் கடன் பெறும்போது சங்கங்களில் உள்ள உரங்களை அளிக்கின்றனர்.

இதனால் விவசாயிகள் பெரும் நட்டத்தை சந்திப்பதாகவும் கடும் குற்றம் சாட்டினர். இதேபோல் பல்வேறு அரசியல் நெல் கொள்முதல் நிலையங்களில் முறைகேடுகளை களைய ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டனர்.

விவசாயிகளின் கோரிக்கை மனுக்கள் பல மாதங்களாக தீர்வு காணப்படாது உள்ளதை உடனடியாக கவனத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டனர்.

மேலும் கூட்டுறவு வங்கிகளில் 10 ஆயிரத்துக்கு நகை கடன் வழங்குவதில்லை எனவும் புகார் தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து விவசாயிகளுக்கு பல்வேறு நல திட்ட உதவிகளை ஆட்சியர் கலைச்செல்வி மோகன் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் சிவருத்ரய்யா, மாவட்ட ஊரக வளர்ச்சி திட்ட முகமை செல்வகுமார், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ஜெயஸ்ரீ உள்ளிட்ட பல்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

மேலும் கூட்டத்தில் அதிக அளவில் விவசாயிகள் கலந்து கொண்ட நிலையில் போதிய இருக்கைகள் அமைக்கப்படததால் பல விவசாயிகள் இரண்டு மணி நேரம் கூட்டம் நடைபெறும் வரை நின்று கொண்டே இருந்தனர்.

Updated On: 26 May 2023 11:34 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அக்கா உள்ளவன் மக்காக இருக்க மாட்டான்..!
  2. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையில் வரும் துன்பங்கள் நிரந்தரம் அல்ல...பனி போல் விலகும்
  3. லைஃப்ஸ்டைல்
    ‘நாம் வாழும் ஒவ்வொரு நொடியும் மதிப்புமிக்கது’
  4. லைஃப்ஸ்டைல்
    உணர்ச்சிகளை உரக்கச் சொல்லும் உன்னத மேற்கோள்கள்
  5. லைஃப்ஸ்டைல்
    ஆணவம்: வாழ்வை சிதைக்கும் நஞ்சு
  6. லைஃப்ஸ்டைல்
    பன்முகத்திறனில் தனித்த அடையாளம், சட்டமேதை அம்பேத்கர்..!
  7. வீடியோ
    🔴LIVE: கர்நாடகாவில் அண்ணாமலை அனல் பறக்கும் பேச்சு! | தொண்டர்கள்...
  8. லைஃப்ஸ்டைல்
    நீதியின் பக்கம் நில்லுங்கள்..! நீதி கிடைக்கும்..!
  9. வீடியோ
    ஆன்மிகம் கை கொடுக்கும்!படத்தை பார்த்தா என்ன கிடைக்கும்?...
  10. ஈரோடு
    ஈரோட்டில் மழை பெய்ய வேண்டி இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை, பிரார்த்தனை