ஈரோட்டில் மழை பெய்ய வேண்டி இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை, பிரார்த்தனை

ஈரோட்டில் மழை பெய்ய வேண்டி இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை, பிரார்த்தனை
X
ஈரோட்டில் மழை பெய்ய வேண்டியும், தற்போது ஏற்பட்டுள்ள கடுமையான வெயிலின் தாக்கத்திலிருந்து பொதுமக்களை காத்திட ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் பங்கேற்று சிறப்புத் தொழுகை மற்றும் பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.

ஈரோட்டில் மழை பெய்ய வேண்டியும், தற்போது ஏற்பட்டுள்ள கடுமையான வெயிலின் தாக்கத்திலிருந்து பொதுமக்களை காத்திட ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் பங்கேற்று சிறப்புத் தொழுகை மற்றும் பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.

ஈரோடு கருங்கல்பாளையம் ஜன்னத்துல் ஃபிர்தௌஸ் மஸ்ஜித்தில், தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபையின் ஈரோடு மண்டலம் சார்பில், தமிழகத்தில் மழை வேண்டியும், தற்போது ஏற்பட்டுள்ள கடுமையான வெப்ப அலையில் இருந்து பொதுமக்களை காத்திடவும் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் பங்கேற்று சிறப்புத் தொழுகை மற்றும் சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.

இன்றைய நிலையில், ஈரோடு, கரூர், சேலம், கோவை உள்ளிட்ட தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்கள் வெப்பத்தின் தாக்கம் மிகக் கடுமையாக உள்ளது. இதேபோல், இந்திய அளவில் ஈரோடு இரண்டாம் இடம், மூன்றாம் இடம் பிடித்துள்ளதாலும், கடந்த 15 நாட்களுக்கு மேலாக 105 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை பதிவாகி வருவதால், ஈரோடு மாவட்டத்திலுள்ள பவானிசாகர் அணை, பவானி ஆறு, காவிரி ஆறு உள்ளிட்ட நீர் நிலைகள், குளம், குட்டைகள், அணைகளில் தண்ணீர் இருப்பு மிக மிக குறைந்து வருகிறது. நிலத்தடி நீரும் வெகுவாக குறைந்து வருகிறது.

எனவே, இந்த நிலைகள் மாறி நாடு வளம் பெறவும், மக்கள் நலம் பெறவும், வெப்பம் தணிந்து மழை வேண்டி இறைவனிடம் சிறப்பு தொழுகை மற்றும் சிறப்பு பிரார்த்தனை உள்ளிட்ட பிரார்த்தனைகளில் ஈடுபட்டு வழிபாடு மேற்கொண்டனர். இந்த சிறப்பு மழைத்தொழுகையை தாவூதிய்யா அரபிக் கல்லூரி முதல்வர் முஹம்மது யூசுப் தாவூதி நடத்தினர். ஈரோடு மாவட்ட அரசு காஜி கிபாயத்துல்லா குத்பா பிரசங்கம் செய்தார். தாவூதிய்யா பேராசிரியர் முஹம்மது ஹுசைன் தாவூதி கூட்டு பிரார்த்தனை செய்தார்.

முஹம்மது ஹஃபீழ் தாவூதி, ஷேக் முஹம்மது தாவூதி, அப்துஸ் ஸலாம் ஜமாலி, பைஸுர் ரஹ்மான் பாகவி, தைய்யிப் தாவூதி மற்றும் ஈரோட்டைச் சேர்ந்த இமாம்கள் மஸ்ஜித் நிர்வாகிகள் ஜமாஅத்தார்கள், சிறப்பு தொழுகை மற்றும் பிரார்த்தனையில் ஈடுபட்டனர். இந்நிகழ்வில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர். மேலும், இச்சிறப்பு பிரார்த்தனையில், பங்கேற்ற அனைவருக்கும் மரக்கன்றுகள் இலவசமாக வழங்கப்பட்டன.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!