/* */

கோ - ஆப்டெக்ஸின் தீபாவளி விற்பனையை மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி துவக்கி வைப்பு

காஞ்சிபுரம் காமாட்சி கோவா டெக்ஸ் விற்பனை நிலையம் கடந்த ஆண்டு 113.5 லட்சம் விற்பனை செய்த நிலையில் , இந்த ஆண்டு 150 லட்சம் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

கோ - ஆப்டெக்ஸின் தீபாவளி விற்பனையை மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி துவக்கி வைப்பு
X

காஞ்சிபுரம் காமாட்சி கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தில் புதிய ரக சேலைகளை பார்வையிட்டு, தீபாவளி விற்பனையை துவக்கி வைத்த மாவட்ட ஆட்சியர் மா.ஆர்த்தி.

கோ-ஆப்டெக்ஸ் அனைவராலும் அழைக்கப்படும் தமிழ்நாடு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கம் கடந்த 1935 ஆம் ஆண்டில் துவக்கப்பட்டு 87 ஆண்டுகளாக வாடிக்கையாளர்களுக்கு சேவை புரிந்து வருகிறது.

பண்டிகை காலங்களில் 30% சிறப்பு தள்ளுபடியுடன் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தற்போதைய கால சூழ்நிலைக்கு ஏற்ப பல வண்ணக் கலவைகளில் பட்டு மற்றும் கைத்தறி ரகங்கள் சேலை வடிவமைப்பிலும் ஆர்கானிக் மற்றும் கலங்காரி காட்டன் புடவைகள் குறைந்த விலையில் விற்பனை செய்து வருகிறது.

அவ்வகையில் பேலூர் மண்டலத்தின் கீழ் காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, திருப்பதி மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் மொத்தம் 14 விற்பனை நிலையங்கள் செயல்பட்டு வருகிறது கடந்த ஆண்டு தீபாவளிக்கு ரூபாய் 9.47 கோடி விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில் இந்த ஆண்டு 16 கோடியை இலக்காக நிர்ணயித்து அதற்கான விற்பனை கடந்த சில தினங்களுக்கு முன்பு வேலூரில் துவங்கப்பட்டது.

அவ்வகையில் காஞ்சிபுரத்தில் செயல்பட்டு வரும் காமாட்சி கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையம் கடந்தாண்டு 113.53 லட்சம் விற்பனை செய்யதது. நடப்பாண்டுக்கு ரூபாய் 150 லட்சம் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

இதற்கான விற்பனை துவக்க விழா இன்று மண்டல மேலாளர் நாகராஜன் தலைமையில் நடைபெற்றது. விழாவில் சிறப்பு விருந்தினராக மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி கலந்து கொண்டு புதிய ரக சேலைகளை பார்வையிட்டு விற்பனையை துவக்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் உற்பத்தி மற்றும் பகிர்மான மேலாளர் ஸ்ரீ ஞான பிரகாசம் , காஞ்சி கிளை நிறுவன மேலாளர் பெருமாள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Updated On: 23 Sep 2022 6:45 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    ராகவா லாரன்ஸ்-ஐ புகழ்ந்து தள்ளிய சூப்பர் ஸ்டார் | #ragavalawrence |...
  2. லைஃப்ஸ்டைல்
    நேர்காணும் தெய்வம், அம்மா..!
  3. லைஃப்ஸ்டைல்
    அக்கா உள்ளவன் மக்காக இருக்க மாட்டான்..!
  4. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையில் வரும் துன்பங்கள் நிரந்தரம் அல்ல...பனி போல் விலகும்
  5. வீடியோ
    மிஷ்கின் படத்தில எல்லாமே violenceஅது societyக்கு...
  6. லைஃப்ஸ்டைல்
    ‘நாம் வாழும் ஒவ்வொரு நொடியும் மதிப்புமிக்கது’
  7. லைஃப்ஸ்டைல்
    உணர்ச்சிகளை உரக்கச் சொல்லும் உன்னத மேற்கோள்கள்
  8. லைஃப்ஸ்டைல்
    ஆணவம்: வாழ்வை சிதைக்கும் நஞ்சு
  9. லைஃப்ஸ்டைல்
    பன்முகத்திறனில் தனித்த அடையாளம், சட்டமேதை அம்பேத்கர்..!
  10. வீடியோ
    🔴LIVE: கர்நாடகாவில் அண்ணாமலை அனல் பறக்கும் பேச்சு! | தொண்டர்கள்...