/* */

காஞ்சிபுரம் மாநகராட்சியில் பல்துறை அலுவலர்கள் ஒருங்கிணைப்பு கூட்டம்

காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நிலவும் பிரச்சனைகள் குறித்து பல்துறை அலுவலர்கள் ஆலோசனைக் கூட்டம் மாநகராட்சி கூட்டரங்கில் நடைபெற்றது.

HIGHLIGHTS

காஞ்சிபுரம் மாநகராட்சியில் பல்துறை அலுவலர்கள் ஒருங்கிணைப்பு கூட்டம்
X

காஞ்சிபுரம் மாநகராட்சி அலுவலக கூட்டரங்கில் பல்துறை அலுவலர்களுக்கான ஒருங்கிணைப்பு ஆலோசனைக் கூட்டம் மேயர் மகாலட்சுமி யுவராஜ் தலைமையில் நடைபெற்றது.

காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட 51 வார்டு பகுதியில் நிலவும் பிரச்சனைகள் குறித்து பல்துறை அலுவலர்கள் ஒருங்கிணைப்பு குழு ஆலோசனை கூட்டம் மேயர் மகாலட்சுமி யுவராஜ் மற்றும் துணை மேயர் குமரகுருநாதன் தலைமையில் மாநகராட்சி கூட்ட அரங்கில் நடைபெற்றது.

இதில் பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை, கால்நடைத்துறை மின்சாரம் , அரசு போக்குவரத்து கழகம் , வருவாய்த்துறை , இந்து சமய அறநிலைத்துறை , காவல் ஆய்வாளர் , போக்குவரத்து காவல்துறை, தீயணைப்பு துறை உள்ளிட்ட பல்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் காஞ்சிபுரம் நகரில் நிலவும் போக்குவரத்து பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் ஆலோசிக்கப்பட்டது.

காஞ்சிபுரம் நகரில் அதிகளவில் நாய் தொல்லைகள் உள்ளதாக பொதுமக்கள் புகார் தெரிவிப்பதால் அதனை பிடித்து கருத்தடை செய்தல் ,

மாநகராட்சி பகுதியில் உள்ள 14 திருக்கோயில் குளங்களை மழை நீர் சேமிப்பு குளங்களாக மாற்ற ஆலோசிக்கப்பட்டது.

அரசு தலைமை மருத்துவமனை முன்பு உள்ள அனைத்து ஆக்கிரமிப்புகளையும் அகற்றுதல் , நகரில் மினி பஸ் இயக்குதல் , ஆட்டோ ஓட்டுநர் உடன் இணைந்து காஞ்சி சுற்றுலா ஆட்டோ திட்டம் செயல்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

தீயணைப்பு துறை மூலம் மாநகராட்சி உயிர்களுக்கு பேரிடர் காலங்களில் எவ்வாறு செயல்படுவது என பயிற்சி அளிப்பது , நகரின் போக்குவரத்துக்கு இடைவெளிவாக உள்ள அனைத்து ஆக்கிரமிப்புகளை அகற்றுவது, பல்லடுக்கு வாகன நிறுத்த திட்டத்தை விரைவுபடுத்த முடிவு செய்யப்பட்டது.

இக்கூட்டம் குறித்து மேயர் மகாலட்சுமி யுவராஜ் கூறுகையில் , இனி மாதம்தோறும் பல் துளை அலுவலக ஆலோசனை ஒருங்கிணைப்பு கூட்டம் நடைபெற்று காஞ்சிபுரம் மாநகராட்சி முதன்மை மாநகராட்சியாக ஆக்க திட்டமிட கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது என தெரிவித்தார்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மாநகராட்சி ஆணையர் கண்ணன் , பொறியாளர் கணேசன் உள்ளிட்ட பல்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 12 Aug 2022 10:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ‘தனியே ... தன்னந்தனியே ...’ - வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!
  2. லைஃப்ஸ்டைல்
    நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா? - ஒரு பக்க காதல் மேற்கோள்கள்...
  3. லைஃப்ஸ்டைல்
    ‘பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே... பார்த்ததாரும் இல்லையே!’ - தமிழில்...
  4. லைஃப்ஸ்டைல்
    எண்ணெய் குளியலில் இவ்வளவு விஷயங்கள் இருக்குதா?
  5. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்றவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  6. தொழில்நுட்பம்
    POCO X6 Neo: விலையால் அசத்தும் ஃபோன்!
  7. லைஃப்ஸ்டைல்
    ஒற்றை வரியில் வெற்றி மொழிகள்..!
  8. லைஃப்ஸ்டைல்
    அலைகளற்ற ஆழ்கடல், அப்பா..!
  9. பொன்னேரி
    மீஞ்சூர், சோழவாரத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு
  10. லைஃப்ஸ்டைல்
    காதல் என்றால் ரொமான்ஸ் இல்லாமலா..?