/* */

காஞ்சிபுரத்தில் சுதந்திர தின அணிவகுப்பு மரியாதையை ஏற்ற ஆட்சியர்

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற விழாவில் ரூ1.19 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கபட்டது.

HIGHLIGHTS

காஞ்சிபுரத்தில் சுதந்திர தின அணிவகுப்பு மரியாதையை ஏற்ற ஆட்சியர்
X

தேசிய கொடி ஏற்றி வைத்து காவல்துறை அணி வகுப்பு மரியாதை ஏற்றுகொண்ட மாவட்ட ஆட்சியர்.

நாட்டின் 75வது சுதந்திர தின விழா அமுதப் பெருவிழாவாக கொண்டாடப்படுகிறது. சுதந்திர தின அமுதப் திருவிழாவை முன்னிட்டு இன்று காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள அண்ணா காவல் அரங்க திடலில் சுதந்திர தின விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது.

அதையொட்டி காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் டாக்டர் மா.ஆர்த்தி தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தி , காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். பின்னர் முவர்ண பலூனையும், வெள்ளை புறாக்களையும் மாவட்ட ஆட்சியர் பறக்கவிட்டார்.

அதனைதொடர்ந்து பல்வேறு துறைகளின் கீழ் 52 பயனாளிகளுக்கு 1கோடியே 19 லட்சத்து 92 ஆயிரத்து 239 ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

மேலும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய காவல்துறையினர் மற்றும் அரசு அலுவலர்களுக்கு சான்றிதழ்களையும் வழங்கினார். பள்ளி மாணவ மாணவிகள் கலைநிகழ்ச்சிகளை பார்வையிட்டு பாரட்டினார்.

இந்நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் சரக காவல்துறை துணைத்தலைவர் சத்தியபிரியா, மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் Dr சுதாகர், மாவட்ட வருவாய் அலுவலர் சிவ ருத்ரையா, திட்ட அலுவலர் ஸ்ரீதேவி , வருவாய் கோட்டாட்சியர் கனிமொழி மற்றும் அனைத்து துறை உயர் அதிகாரிகளும் அலுவலர்களும் கலந்து கொண்டனர்.

Updated On: 15 Aug 2022 8:45 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    அரசு பங்கு பத்திரங்கள் ஏலம்: மத்திய அரசு அறிவிப்பு
  2. தமிழ்நாடு
    வலிமையான கரியமிலவாயு உறிஞ்சிகளாக இந்திய பெருங்கடல், வங்காள விரிகுடா:...
  3. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா
  4. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே சுவையான மக்கானா கீர் செய்வது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    ஏசி அறையில் தூங்கலாமா? கூடாதா? - விவரமா தெரிஞ்சுக்குங்க!
  6. லைஃப்ஸ்டைல்
    ஆழியில் கண்டெடுத்த அற்புத முத்து..! எங்க வீட்டு இளவரசி..!
  7. தமிழ்நாடு
    வாகனங்களில் ஸ்டிக்கர்களுக்கு தடை! விலக்கு அளிக்க வழக்கறிஞர்கள் சங்கம்...
  8. லைஃப்ஸ்டைல்
    என்றென்றும் நம் நினைவில் நிற்கும் ஆசிரியர்கள்
  9. திருவண்ணாமலை
    மாணவா்கள் இணையதள மோசடிகளில் சிக்காதீர்: கூடுதல் எஸ்.பி. அறிவுரை
  10. வீடியோ
    வரிசைகட்டி டூர் அடிக்கும் அரசியல்வாதிகள் |மலைப்பிரதேசங்களில் கூத்து...