காஞ்சிபுரத்தில் மாபெரும் இரண்டாவது புத்தகத் திருவிழா-2024 நிறைவு

எழுதுக அமைப்பின் சார்பில் பள்ளி கல்லூரி மாணவர்கள் புத்தகம் எழுதி வெளியிட்ட நிலையில் அவர்களுக்கு சிறப்பு செய்யும் வகையில் மாவட்ட ஆட்சியர் சான்றிதழ் வழங்கி கவுரவித்தார்.
Book Festival-2024 Completion
காஞ்சிபுரம் மாவட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக அண்ணா காவல் அரங்கம் மைதானத்தில். காஞ்சிபுரம் மாவட்ட மக்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ,மாணவியர்கள் பயன்பெறும் வகையில் மாவட்ட நிர்வாகம் மற்றும் தென்னிந்திய புத்தக விற்பனையாளர் பதிப்பாளர் சங்கம் மற்றும் பதிப்பாளர் சங்கம் இணைந்து, நடத்திய இரண்டாவது புத்தக திருவிழா-2024 நிறைவுபெற்றது.
கடந்த 2024 பிப்ரவரி 09 தொடங்கி 2024 பிப்ரவரி 19 வரை 11 நாட்கள் காஞ்சியில் நடைபெற்ற புத்தகத் திருவிழாவில் காட்சிப்படுத்தப்பட்ட புத்தகங்கள் நம் கண்ணுக்கும் கருத்துக்கும் விருந்தளித்ததோடு மட்டுமல்லாமல், மாலை வேலைகளில் பேசிய சிறப்பு பேச்சாளர்களின் சீரிய உரை நம் செவிக்கு விருந்தளித்தது என்றால் அது மிகையல்ல.
100-க்கும் மேற்பட்ட புத்தக அரங்குகள், 1000-க்கும் மேற்பட்ட எழுத்தாளர்களின் படைப்புகள், இலட்சத்திற்கும் மேற்பட்ட புத்தகங்கள், குழந்தைகளுக்கென அமைக்கப்பட்டிருந்த பிரத்யேகமான அரங்குகள் மற்றும் சிறப்பு அம்சங்களாக பள்ளி மாணவர்களுக்கென KIDS CORNER, PLAY AND LEARN, மாணவர்கள் தங்கள் படைப்பாற்றல்கள் மற்றும் கலைத் திறன்களை வெளிப்படுத்த தினந்தேறும் போட்டிகள், கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
சிறப்பு அழைப்பாளர்கள் அனைவரும் சொன்ன ஒருமித்த கருத்து என்னவெனில் இதற்கு முன் வெவ்வேறு மாவட்டங்களில் அவர்கள் உரை நிகழ்த்திய புத்தகத் திருவிழாவில் வந்திருந்த கூட்டத்தை விட எண்ணிலடங்கா கூட்டம் காஞ்சி மாநகரில் கூடியிருந்ததை பார்த்த போது காஞ்சியின் மக்கள் புத்தகத்தின் மீது கொண்ட நேசத்தையும் அவர்களது இலக்கிய தாகத்தையும் உணர முடிந்ததாக கூறியது நம் மாநகரத்தின் பெருமைக்கு ஒரு சான்று.
Book Festival-2024 Completion
காஞ்சிபுரத்தில் நடைபெற்ற புத்தக திருவிழாவில் அவ்வாளகத்தை 24 மணி நேரமும் தூய்மையாக வைத்திருந்த தூய்மை பணியாளர்களைக் கௌரவித்த மாவட்ட ஆட்சியர்.
3,00,000 பார்வையாளர்கள் இப்புத்தக திருவிழாவினைப் பார்வையிட்டு 50,000 புத்தகங்கள் சுமார் ரூ.65 இலட்சம் மதிப்பில் விற்கப்பட்டுள்ளது.மேலும், “எழுதுக” என்ற அமைப்பு மூலம் புத்தகம் எழுதிய காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 14 மாணவர்களுக்கு கேடயம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. .
இந்நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சண்முகம், மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஜெயக்குமார், முதன்மைக் கல்வி அலுவலர் வெற்றிச்செல்வி, மாவட்ட நியமன அலுவலர் (உணவு பாதுகாப்புத்துறை) மரு.அனுராதா, அரசு அலுவலர்கள், மாணவ,மாணவியர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu