/* */

காஞ்சிபுரத்தில் மாணவிகளுக்கு திடக்கழிவு மேலாண்மை செயல்முறை விழிப்புணர்வு: மேயர், ஆணையர் பங்கேற்பு..!

காஞ்சிபுரத்தில் திடக்கழிவு மேலாண்மை குறித்து பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த பள்ளி மாணவிகளுக்கு மாநகராட்சி சார்பில் செயல்முறை விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

HIGHLIGHTS

காஞ்சிபுரத்தில் மாணவிகளுக்கு திடக்கழிவு மேலாண்மை செயல்முறை விழிப்புணர்வு: மேயர், ஆணையர் பங்கேற்பு..!
X

காஞ்சிபுரம் மாநகராட்சி தாலுக்கா அலுவலகம் அருகே உள்ள அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகளுக்கு என் குப்பை என் பொறுப்பு என்னும் திடக்கழிவு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

தமிழகத்தில் நகராட்சி நிர்வாகத்திற்கு பெரும் சவாலாக இருப்பது திடக்கழிவு. இது குறித்து பொதுமக்களுக்கு அதிகளவில் விழிப்புணர்வு ஏற்படுத்த தமிழக அரசு அறிவுறுத்தியது. அவ்வகையில் காஞ்சிபுரம் மாநகராட்சி நாள்தோறும் பல லட்சம் டன் குப்பைகள் கையாள்கிறது. மாநகராட்சி சார்பில் பல்வேறு விழிப்புணர்வு ஏற்படுத்தி நிலையில் பலர் தற்போது குப்பைகளை தரம் பிரித்து வழங்குவது துவங்கியுள்ளது.

இந்நிலையில் காஞ்சிபுரம் மாநகராட்சி அடுத்த கட்டமாக பள்ளி மாணவ மாணவிகளிடையே திடக்கழிவு மேலாண்மை குறித்து செயல்முறை விளக்கம் அளித்து அதை தங்கள் வீடுகளில் செயல்படுத்த பெற்றோர்களுக்கு எடுத்துரைக்கும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்த திட்டமிடப்பட்டது.

அதன்படி, காஞ்சிபுரம் தாலுகா அலுவலகம் எதிரே அமைந்துள்ள அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் இன்று மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ் தலைமையில் பள்ளி மாணவிகளுக்கு திடக்கழிவு மேலாண்மை செயல்படுத்துவது குறித்து செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது. மாநகராட்சி ஆணையர் கண்ணன் திடக்கழிவு குறித்து எளிமையான முறையில் மாணவிகளுக்கு எடுத்துரைத்தார்.

அதன்பின்னர், மாநகராட்சி ஊழியர்கள் குப்பைகளை தரம் பிரித்தல் குறித்து பயன்படுத்தக் கூடியவை, பயன்படுத்தக் கூடாதவை என பொருட்களை காட்டி விளக்கினர். மேலும் அனைவரும் *என் குப்பை என் பொறுப்பு* என உறுதி ஏற்கவேண்டும் என கேட்டுக்கொள்ளபட்டது..இதுபோன்ற எளிய முறை செயல் விளக்கங்கள் மாணவிகள் இடையே மனதில் பதிந்து தங்கள் வீடுகளில் இதனை செயல்படுத்தினால் பெருமளவில் சுகாதாரம் பேணப்படும் என மேயர் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி உறுப்பினர் சசிகலா கணேஷ் , பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் என பலர் கலந்து கொண்டனர்.


Updated On: 8 July 2022 6:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தினமும் காலைப் பொழுதுகளை மிக அழகாக்கும் காலை வணக்கம் கவிதைகள்!
  2. லைஃப்ஸ்டைல்
    உறவுகளுக்கு, நட்புக்கு அன்பின் வெளிப்பாடாக முன்கூட்டியே சொல்வோம்...
  3. லைஃப்ஸ்டைல்
    தீபாவளிக்கு போனஸாக, அட்வான்ஸ் வாழ்த்து சொல்வோம் வாங்க..!
  4. லைஃப்ஸ்டைல்
    உங்கள் இல்லத்தில் அன்பு செழிக்கட்டும்! ஆனந்தம் நிலைக்கட்டும்!! -...
  5. லைஃப்ஸ்டைல்
    கவிதை வரிகளில் பிறந்தநாள் வாழ்த்துகளை சொல்வோம்!
  6. லைஃப்ஸ்டைல்
    இனிய திருமண நாள் நல்வாழ்த்துகள்..!
  7. வீடியோ
    ஆதரவு திரட்டும் OPS | கொங்கில் வலுவிழக்கும் Edappadi | O Panneerselvam...
  8. லைஃப்ஸ்டைல்
    இந்த மீன்களை சாப்பிட்டா கொலஸ்ட்ரால் குறையுமாம்..!
  9. ஈரோடு
    ஈரோடு ஆருத்ர கபாலீஸ்வரர் கோவிலில் வைகாசி விசாகத் தேரோட்டம்
  10. ஈரோடு
    முள்ளிவாய்க்கால் நினைவு தினம்: ஈரோட்டில் மெழுகுவர்த்தி ஏந்தி