/* */

முழு கொள்ளளவை எட்டிய மணிமுக்தா அணையில் கள்ளக்குறிச்சி கலெக்டர் ஆய்வு

அணையில் இருந்து விநாடிக்கு 7,042 கன அடி தண்ணீர் புதிய ஷட்டர் வழியாக ஆற்றில் வெளியேற்றப்படுகிறது

HIGHLIGHTS

முழு கொள்ளளவை எட்டிய மணிமுக்தா அணையில் கள்ளக்குறிச்சி கலெக்டர் ஆய்வு
X

கள்ளக்குறிச்சி அருகேயுள்ள சூளாங்குறிச்சி மணிமுக்தா அணையினை கலெக்டர் ஸ்ரீதர் ஆய்வு செய்தார்.

கள்ளக்குறிச்சி அருகேயுள்ள சூளாங்குறிச்சி மணிமுக்தா அணையினை கலெக்டர் ஸ்ரீதர் ஆய்வு செய்தார்.

தொடர்மழையினால் கள்ளக்குறிச்சி அடுத்த சூளாங்குறிச்சியில் உள்ள 36 அடி உயர கொள்ளளவு கொண்ட மணிமுக்தா அணை நிரம்பியுள்ளது. தொடர் நீர்வரத்துஅணையில் இருந்து விநாடிக்கு 7,042 கன அடி தண்ணீர் புதிய ஷட்டர் வழியாக ஆற்றில் வெளியேற்றப்படுகிறது .அதிகளவு தண்ணீர் வெளியேற்றப்படுவதால் மணிமுக்தா ஆற்றின் கரைபகுதியை ஒட்டி தாழ்வான பகுதியில் வசிக்கும் மக்களுக்கு, வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மணிமுக்தா அணையினை கலெக்டர் ஸ்ரீதர் ஆய்வு செய்தார். தொடர்ந்து, பதிவேட்டினை பார்வையிட்டு, அணைக்கு எவ்வளவு தண்ணீர் வருகிறது, தண்ணீரின் அளவை எவ்வாறு கணக்கிடுகிறீர்கள், நீர்வரத்து அதிகரிக்க வாய்ப்புள்ளதா, முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கைகள் உள்ளிட்டவைகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். ஆய்வின் போது திட்ட இயக்குநர் மணி, பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் கணேசன் உட்பட பலர் உடனிருந்தனர்.

Updated On: 21 Nov 2021 3:15 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  4. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  8. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?