/* */

கள்ளக்குறிச்சியில் ஆரோக்கிய இந்தியா சுதந்திர ஓட்டம்: ஆட்சியர் பங்கேற்பு

கள்ளக்குறிச்சியில் ஆரோக்கிய இந்திய சுதந்திர ஓட்டத்தை மாவட்ட ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர் இன்று கொடியசைத்து துவங்கி வைத்தார்.

HIGHLIGHTS

கள்ளக்குறிச்சியில் ஆரோக்கிய இந்தியா சுதந்திர ஓட்டம்: ஆட்சியர் பங்கேற்பு
X

கள்ளக்குறிச்சியில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், கள்ளக்குறிச்சி மாவட்ட பிரிவு நேரு யுவகேந்திரா சங்கம் மற்றும் நாட்டு நலப்பணித் திட்டம் ஆகியவை இணைந்து நடத்திய ஆரோக்கிய இந்திய சுதந்திர ஓட்டத்தை மாவட்ட ஆட்சித்பி.என்.ஸ்ரீதர் இன்று கொடியசைத்து துவங்கி வைத்தார். இந்த ஓட்டத்தில் ஆட்சியரின் குடும்பத்தினர் கலந்துகொண்டனர்.

இந்த ஓட்டம் மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாகத்தில் தொடங்கி ஏ.கே.டி. பள்ளி வளாகத்தில் நிறைவடைந்தது. இதில் 17வயதிற்கு மேற்பட்ட பள்ளி கல்லூரிகளை சேர்ந்த மாணவர்கள் பங்கேற்றனர். நோக்கமே நம்நாடு 75 வது சுதந்திர தின விழாவை கொண்டாடுவது சிறப்பிக்கும் வகையில் உடல் ஆரோக்கியத்தை வலியுறுத்தும் விதமாக இந்த ஓட்டம் நடத்தப்பட்டது.

இந்த ஒட்டத்துக்குப்பின் பேசிய ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர், மக்கள் தங்கள் அன்றாட வாழ்வில் ஓட்டம் உடற்பயிற்சி போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடும்போது, உடல் பருமன், சோம்பல், மனவருத்தம், கவலை போன்றவற்றில் இருந்து மக்கள் விடுபட்டு ஆரோக்கியத்துடன் வாழ்வதற்கு உடற்பயிற்சி அவசியம் ஆகும்.

தினமும் குறைந்தது 30 நிமிடங்களாவது உடற்பயிற்சிக்காக ஒதுக்கீடு செய்யுங்கள். கூட்டத்தின் முக்கிய நோக்கமே ஆரோக்கியமான இந்தியாவை உருவாக்க உறுதி செய்ய வேண்டும் என்பதுதான். எனவே கூட்டத்தில் பங்கேற்றவர்கள் உடற்பயிற்சியின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

மேலும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 75 தேர்வு செய்யப்பட்ட கிராமங்களில் நேரு யுவகேந்திரா இளைஞர் மகளிர் மன்றங்கள் சார்பில் ஆரோக்கிய இந்தியா சுதந்திரம் நடைபெறுகிறது. ஓட்டத்தில் பங்கேற்று வெற்றி பெற்ற முதல் மூன்று இடங்களுக்கு பரிசு கோப்பை மற்றும் சான்றிதழ்களும் பங்கேற்ற அனைவரும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

ஆரோக்கிய இந்திய சுதந்திர ஓட்டத்தில் பங்கேற்ற பள்ளி, கல்லூரி மாணவர்களாகிய நீங்கள் நாளை நமது மாவட்டத்தில் 600 மையங்களில் நடைபெறும் மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாமில் பங்கேற்று தவறாமல் தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும். உங்கள் பெற்றோர் உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் கொரோனாவிலிருந்து பாதுகாத்துக்கொள்ள தடுப்பூசியை பேராயுதம் என்ற இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் அறிவுறுத்தி, அதை எடுத்து வைத்து நாளை நடைபெறும் முகாமில் தகுதி உள்ள அனைவரும் செலுத்திக்கொள்ள விழிப்புணர்வு பணியை மேற்கொள்ள வேண்டும்.

இப்போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என ஆட்சியர் தெரிவித்தார்.

முன்னதாக மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாகத்தில், மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஆரோக்கிய இந்தியா சுதந்திரம் அனைவரும் உறுதிமொழி ஏற்கப்பட்டு ஓட்டம் நடைபெற்றது. இப்போட்டியில் 17 வயதுக்கு மேற்பட்ட பள்ளி கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 11 Sep 2021 11:55 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அப்பா அம்மாவுக்கு கல்யாண நாள் வாழ்த்து- இப்படிக்கு பிள்ளைகள்..!
  2. லைஃப்ஸ்டைல்
    மல்லிகையே மல்லிகையே தூதாகப் போ - என் காதல் தேவதைக்கு வாழ்த்துகளை...
  3. லைஃப்ஸ்டைல்
    என்னுள் நிறைந்தவளுக்கு இதயபூர்வமான பிறந்த நாள் வாழ்த்துகள்!
  4. லைஃப்ஸ்டைல்
    என்னை ஆள்பவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  5. வீடியோ
    மேடையிலேயே Cool Suresh செய்த சேட்டை அதிர்ச்சியில் உறைந்த நடிகைகள்...
  6. வீடியோ
    🔴LIVE :இளைஞர்களின் உணர்வுகளையும்,தியாகத்தையும் சீமான் வியாபாரம்...
  7. வீடியோ
    கதாநாயகி இல்லாத குறையை தீர்த்த Cool Suresh ! #coolsuresh...
  8. லைஃப்ஸ்டைல்
    குடும்ப பல்கலையின் தலைவர்களுக்கு திருமணநாள்..! வாழ்த்துகிறோம்...
  9. லைஃப்ஸ்டைல்
    50 ஆண்டு திருமண வாழ்க்கை எனும் பொன்விழா! வாழ்த்தலாம் வாங்க
  10. ஈரோடு
    புஞ்சை புளியம்பட்டி அருகே அரசு பேருந்தின் மீது கல்வீசி கண்ணாடியை...