/* */

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வாக்காளர் சுருக்கக் திருத்த சிறப்பு முகாம் நீட்டிப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வாக்காளர் சுருக்கக் திருத்த சிறப்பு முகாம் கூடுதலாக 2 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வாக்காளர் சுருக்கக் திருத்த சிறப்பு முகாம் நீட்டிப்பு
X

மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர்.  

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள 4 சட்டசபை தொகுதிகளுக்குட்பட்ட 1,272 ஓட்டுச்சாவடி மையங்களிலும் கடந்த 13 மற்றும் 14 தேதிகளில் வாக்காளர்கள் பட்டியல் சுருக்க திருத்த சிறப்பு முகாம் நடைபெற்றது.

மேலும் வரும் 27 மற்றும் 28 தேதிகளில் முகாம் நடைபெற உள்ளது. முகாமில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தம் மேற்கொள்ளுதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.

இந்நிலையில் சில நாட்களாக பெய்து வரும் மழையினால், ஓட்டுச்சாவடி மையத்திற்கு செல்ல முடியாமல் வாக்காளர்கள் சிரமமடைந்துள்ளனர். எனவே, தேர்தல் ஆணைய உத்தரவுப்படி கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள 1,272 ஓட்டுச்சாவடி மையங்களிலும் வரும் 20 மற்றும் 21ம் தேதிகளில் வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம் கூடுதலாக நடைபெற உள்ளது.

காலை 9:30 மணியில் இருந்து மாலை 5:30 மணி வரை நடைபெறும் சிறப்பு முகாமில், பொதுமக்கள் சமூக இடைவெளியை பின்பற்றி மனுக்களை அளிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் தெரிவித்துள்ளார்.

Updated On: 18 Nov 2021 1:38 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இந்த மீன்களை சாப்பிட்டா கொலஸ்ட்ரால் குறையுமாம்..!
  2. ஈரோடு
    முள்ளிவாய்க்கால் நினைவு தினம்: ஈரோட்டில் மெழுகுவர்த்தி ஏந்தி
  3. இந்தியா
    பாஜக-வின் பிளான் B என்ன?
  4. இந்தியா
    பாஜக - காங்கிரஸ் யாருக்கு வெற்றி? தரவுகள், கள நிலவரம் சொல்வது என்ன?
  5. தமிழ்நாடு
    இப்படி ஒரு ரயில் நிலையம் கேள்விப்பட்டிருக்கீங்களா..?
  6. இந்தியா
    ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதலில் பாஜ தலைவர் கொல்லப்பட்டார்..!
  7. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  8. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 761 கன அடியாக சரிவு..!
  9. திருத்தணி
    பள்ளிப்பட்டு அருகே அங்காள பரமேஸ்வரி ஆலய கும்பாபிஷேகம்
  10. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்