/* */

கள்ளக்குறிச்சி அருகே பெண்ணுக்கு வரதட்சணை கொடுமை: கணவர் உள்பட 6 பேர் மீது வழக்கு

கள்ளக்குறிச்சி அருகே பெண்ணுக்கு வரதட்சணை கொடுமை செய்ததாக கணவர் உள்பட 6 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

HIGHLIGHTS

கள்ளக்குறிச்சி அருகே பெண்ணுக்கு வரதட்சணை கொடுமை: கணவர் உள்பட 6 பேர் மீது வழக்கு
X

பைல் படம்.

கள்ளக்குறிச்சி அருகே உள்ள திருக்கனங்கூர் கிராமத்தை சேர்ந்தவர் ராமசாமி மகன் கிரிதரன் (வயது 38). லாரி டிரைவரான இவருக்கும் கள்ளக்குறிச்சி கரியப்ப நகரை சேர்ந்த பார்வதி(35) என்பவருக்கும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

இந்நிலையில் பார்வதியின் நடத்தையில் கிரிதரனுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து அவர், தனது மனைவியை அவருடைய தாய் வீட்டில் விட்டுவிட்டு வந்து விட்டார். திருக்கனங்கூருக்கு சென்ற பார்வதி தனது கணவரை சந்தித்து ஏன் என்னை வீட்டுக்கு அழைத்து செல்ல வரவில்லை என கேட்டுள்ளார்.

அதற்கு கிரிதரன் மற்றும் அவருடைய பெற்றோர், உறவினர்கள் உள்ளிட்ட 6 பேரும் சேர்ந்து, பார்வதியிடம் 20 பவுன் நகை மற்றும் ரூ.1 லட்சம் ரொக்கம் வரதட்சணையாக கொடுக்கவேண்டும் என கூறி, அவரை திட்டி, தாக்கி, மிரட்டியதாக கூறப்படுகிறது.

இதுகுறித்த புகாரின்பேரில் கிரிதரன், அவருடைய தந்தை ராமசாமி, தாய் மீனாட்சி, சகோதரர் வெங்கடேசன், வெங்கடேசன் மனைவி சுதா மற்றும் ஜான்சிராணி ஆகிய 6 பேர் மீது கள்ளக்குறிச்சி அனைத்து மகளிா் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Updated On: 11 Sep 2021 12:31 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ரமலான் வாழ்த்துச் சொல்வோம் வாங்க..!
  2. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  3. லைஃப்ஸ்டைல்
    நண்பனின் பிறந்தநாளில் வேடிக்கையா கலாய்க்கலாம் வாங்க
  4. லைஃப்ஸ்டைல்
    வேடிக்கையான பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
  5. வீடியோ
    பெண் வேடத்தில் வந்த Cool Suresh ! அரண்டுபோன K Raja !#coolsuresh...
  6. இந்தியா
    ஒருபோதும் இந்து அல்லது முஸ்லீம் என்று சொல்லவில்லை: பிரதமர் மோடி
  7. லைஃப்ஸ்டைல்
    சாப்பாட்டுக்கு முன்னும் பின்னும் டீ, காபியை தவிர்க்க வேண்டுமாம்....
  8. இந்தியா
    NewsClick நிறுவனரை கைது செய்தது செல்லாது, உடனடியாக விடுதலை செய்ய...
  9. பட்டுக்கோட்டை
    காலநிலை அறிந்த பயிர் பாதுகாப்பு : விவசாயிகள் பின்பற்ற அறிவுறுத்தல்..!
  10. லைஃப்ஸ்டைல்
    அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்!