/* */

50 அடி கிணற்றில் உயிருக்கு போராடிய நாய்: தீயணைப்புத்துறையினர் உயிருடன் மீட்பு

உளுந்தூர்பேட்டை அருகே 50 அடி கிணற்றில் உயிருக்கு போராடிய நாயை தீயணைப்புத்துறையினர் உயிருடன் மீட்டனர்.

HIGHLIGHTS

50 அடி கிணற்றில் உயிருக்கு போராடிய நாய்: தீயணைப்புத்துறையினர் உயிருடன் மீட்பு
X

நாயை மீட்கும் பணியில் தீயணைப்புத்துறையினர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே பரிக்கல் கிராமத்தில் அரசாங்கம் அறிவித்த குடிநீர் கிணறு தோண்டும் பணி நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் நேற்று 50 அடி உள்ள அந்தக் கிணற்றில் அங்கு சுற்றித் திரிந்து இருந்த நாய் ஒன்று தவறி விழுந்தது. இதை அறிந்த பரிக்கல் கிராமத்தில் உள்ள இளைஞர்களும் பொதுமக்களும் நாயை காப்பாற்ற போராடினார் அவர்களுடைய முயற்சி தோல்வி அடைந்தது .

பின்னர் அங்கிருந்தவர்கள் திருநாவலூரில் உள்ள தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். அங்கிருந்து விரைந்து வந்த திருநாவலூர் தீயணைப்பு நிலையத்தின் நிலைய அலுவலர் ரமேஷ் தலைமையிலான பிரபு, சுந்தரராஜன் ,கோவிந்தராஜ் விரைந்து வந்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்த நாயை பத்திரமாக உயிருடன் மீட்டனர்.

அங்கிருந்த பொதுமக்களும் இளைஞர்களும் அவர்களுக்கு கைதட்டி பாராட்டு தெரிவித்தனர்.

Updated On: 25 Sep 2021 4:36 PM GMT

Related News

Latest News

  1. வானிலை
    தமிழ்நாட்டில் நாளை, நாளை மறுநாள் கனமழை எச்சரிக்கை...!
  2. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  3. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  4. வீடியோ
    🔴LIVE : Savukku Shankar கைது | சீமான் செய்தியாளர் சந்திப்பு | #seeman...
  5. கோவை மாநகர்
    பிளஸ் 2 பொதுத்தேர்வில் 96.97 சதவீத தேர்ச்சி பெற்று நான்காம் இடத்தை ...
  6. காஞ்சிபுரம்
    பிளஸ் 2 தேர்வு முடிவுகள்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் +2 தேர்வில் 92.28...
  7. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை
  8. கல்வி
    தமிழ்நாடு பிளஸ்-2 ரிசல்ட்! மாவட்ட வாரியாக தேர்ச்சி விகிதம்
  9. இந்தியா
    மனநிலை பாதித்த குழந்தையை முதலைகள் நிறைந்த ஆற்றில் தள்ளிய தாய்..!
  10. கல்வி
    12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்! திருப்பூர் மாவட்டம் முதலிடம்