/* */

கள்ளக்குறிச்சி வட்டத்தில் 8 ஆயிரம் ஏக்கர் பருத்தி பயிர்கள் சேதம்

கள்ளக்குறிச்சி வட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக அறுவடைக்கு தயாராக இருந்த 8,000 ஏக்கர் பருத்தி பயிர்கள் சேதமடைந்தது.

HIGHLIGHTS

கள்ளக்குறிச்சி வட்டத்தில் 8 ஆயிரம் ஏக்கர் பருத்தி பயிர்கள் சேதம்
X

சேதமடைந்த பருத்தி பயிர்கள்.

கள்ளக்குறிச்சி வட்டத்திற்குட்பட்ட குதிரைச்சந்தல் உள்ளிட்ட பகுதிகளில் 8,000 ஏக்கர் பரப்பிலான விவசாய நிலங்களில் வீரிய ஒட்டு ரக பருத்தி பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டு உள்ளது. ஆறு மாத கால பயிரான பருத்தி விதைகளை ஏக்கருக்கு ஒன்றரை லட்சம் மதிப்பில் தனியார் நிறுவனங்கள் மூலமாக பெற்று, ஆகஸ்ட் முதல் வாரத்தில் சாகுபடி செய்தனர். தற்போது அறுவடைக்கு தயாராக இருந்தது.

இப்பகுதியில் தொடர் மழை காரணமாக அறுவடைக்கு தயாராக இருந்த பருத்தி பூக்கள் அழுகி சேதமடைந்து, விவசாயிகளுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

இதனால், பாதிப்படைந்த பருத்தி விவசாயிகள் மிகுந்த கவலை அடைந்துள்ளனர்.எனவே, பாதிக்கப்பட்ட பருத்திக்கு முழுமையான நிவாரணம் வழங்க வேண்டும் என, இப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Updated On: 22 Nov 2021 12:37 PM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    சென்னையில் பிரமாண்டமான தாஜ் வீடுகள் விலை தெரியுமா...?
  2. உசிலம்பட்டி
    கனமழை..! சதுரகிரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை..!
  3. கல்வி
    அரசின் சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் வேணும்..? பள்ளி...
  4. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே கோடைகால கபாடி பயிற்சி..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  8. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  10. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...