/* */

கள்ளக்குறிச்சி: கோமுகி அணையிலிருந்து 6,700 கன அடி நீர் வெளியேற்றம்

கள்ளக்குறிச்சி மாவட்ட கோமுகி அணையிலிருந்து நேற்று வினாடிக்கு 6 ஆயிரத்து 700 கன அடி உபரி நீர் வெளியேற்றப்பட்டது.

HIGHLIGHTS

கள்ளக்குறிச்சி: கோமுகி அணையிலிருந்து 6,700 கன அடி நீர் வெளியேற்றம்
X

கோமுகி அணை.

கள்ளக்குறிச்சி மாவட்டம், கச்சிராயபாளையம் அடுத்த கல்வராயன் மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ளது கோமுகி அணை.

கடந்த சில தினங்களாக கோமுகி அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியான கல்வராயன் மலையில் தொடர் மழை பெய்து வருகிறது. நேற்று கோமுகி அணை பகுதியில் 13.2 செ.மீ., மழை பதிவாகியது. இதனால் பொட்டியம், கல்படை, மல்லிகைப்பாடி ஆகிய ஆறுகளில் நீர் வரத்து அதிகரித்தது. அணையின் முழு கொள்ளளவான 46 அடியில் (560 மில்லியன் கன அடி தற்போது 44 அடி (489.56 மில்லியன் கன அடி) நீர் நிரம்பியுள்ளது.

இதனைத் தொடர்ந்து அணையின் பாதுகாப்பு கருதி கோமுகி ஆறு வழியாக வரத்து நீர் முழுவதும் நேற்று முன்தினம் இரவு 10 மணி முதல் வினாடிக்கு 6 ஆயிரத்து 700 ம் கன அடி உபரி நீர் வெளியேற்றப்பட்டது.

இதனால் கோமுகி ஆற்றில் வெள்ள பெருக்கு ஏற்பட்டது. கரையோர மக்களுக்கும் வெள்ள அபாய எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. அணைக்கு நீர் தொடர்ந்து வந்து கொண்டு இருப்பதால் பொதுப் பணித்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்

Updated On: 21 Nov 2021 3:14 PM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    சென்னையில் பிரமாண்டமான தாஜ் வீடுகள் விலை தெரியுமா...?
  2. உசிலம்பட்டி
    கனமழை..! சதுரகிரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை..!
  3. கல்வி
    அரசின் சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் வேணும்..? பள்ளி...
  4. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே கோடைகால கபாடி பயிற்சி..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  8. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  10. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...