நான் முதல்வன் திட்டத்தின் கீழ் உயர்கல்வி வழிகாட்டி கருத்தரங்கம்

நான் முதல்வன்  திட்டத்தின் கீழ் உயர்கல்வி வழிகாட்டி கருத்தரங்கம்
X

 ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக அரங்கில் உயர்கல்விக்கு வழிகாட்டும் கருத்தரங்கம் மாவட்ட ஆட்சித்தலைவர் ராஜகோபால் சுன்கரா தலைமையில் நடைபெற்றது

ஈரோட்டில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் உயர்கல்வி வழிகாட்டி தொடர்பாக பள்ளி தலைமையாசிரியர்களுக்கான கருத்தரங்கு நடைபெற்றது

ஈரோடு மாவட்ட பள்ளிக் கல்வித் துறையின் சார்பில் 'நான் முதல்வன்" திட்டத்தின் கீழ்மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் மெட்ரிக் பள்ளிமுதல்வர்களுக்கான உயர்கல்விக்கு வழிகாட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது.

ஈரோடு மாவட்டஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் பள்ளிக் கல்வித் துறையின் சார்பில் 'நான் முதல்வன்" திட்டத்தின் கீழ் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்களுக்கான உயர்கல்விக்கு வழிகாட்டும் கருத்தரங்கம் மாவட்ட ஆட்சித்தலைவர் ராஜகோபால் சுன்கரா தலைமையில் நடைபெற்றது.

கருத்தரங்கில் மாவட்டஆட்சித்தலைவர் பேசியதாவது: தமிழ்நாடு முதலமைச்சர் பள்ளிக்கல்வித் துறையின் மூலம் மாணவ, மாணவியரின் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு சிறப்பான திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார்கள். அந்த வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் ‘நான் முதல்வன்" திட்டத்தின் கீழ் 12ஆம் வகுப்பு பயின்ற மாணவர்களுக்கான உயர்கல்விக்கு வழிகாட்டும் ‘கல்லூரி கனவு" என்ற திட்டத்தினை தொடக்கி வைத்தார்.

அதனைத் தொடர்ந்து, ஈரோடு மாவட்டத்தில் உள்ள அரசு, நகரவை, நிதியுதவி, மேல்நிலைப்பள்ளிதலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்களுக்கான உயர்கல்வி வழிகாட்டிநிகழ்ச்சி சிறப்புடன் நடைபெறுகிறது. இத்திட்டத்தின் நோக்கம் மேல்நிலைப் பள்ளிகளில் படித்து தேர்ச்சி பெற்ற மாணவ,மாணவியர்கள் தங்கள் எதிர்கால கனவை நனவாக்கும் வகையில் அவர்களின் உயர்கல்விக்கான வாய்ப்புகள் பற்றிய பிரிவுவாரியான பட்டப்படிப்புகள்,பட்டயப் படிப்புகள் என்னென்ன உள்ளன என்பதையும், கல்லூரிகளை எவ்வாறு தேர்ந்தெடுப்பது என்பதையும்,மேற்படிப்பு முடித்தவுடன் கிடைக்கும் வேலை வாய்ப்புகள் போன்ற விவரங்களை புகழ்பெற்ற வல்லுநர்கள் மற்றும் கல்வியாளர்களைக் கொண்டு வழிகாட்டுதல்கள் வழங்கப்படுகிறது. இத்தகைய நிகழ்ச்சிகள் மாணவர்களின் எதிர்கால குறிக்கோளை திட்டமிட்டு அடையவும், வெற்றிபெறவும் வழிவகை செய்யும்.‘நான் முதல்வன்" திட்டத்தின் கீழ் ‘கல்லூரி கனவு" நிகழ்ச்சியானது நமது மாவட்டத்தில் நடைபெறுகிறது.

மேலும், இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளவர்கள்; இத்திட்டத்தினை சிறப்பாக மாணவர்களுக்கு போய் சேருகிற ஒரு சூழ்நிலையை உருவாக்க வேண்டும். திட்டத்தை வகுத்துக் கொடுப்பது மட்டுமல்ல அந்ததிட்டம் எப்படி நிறைவேற்றப்படுகிறது என்பதை பொறுத்துதான் அதனுடைய வெற்றி அமையும். எனவேதான் தமிழ்நாடு முதலமைச்சர் இந்ததிட்டத்தை வகுத்துக் கொடுத்திருக்கிறார்கள்.அதை சிறப்பாக செயல்படுத்துவது நம்முடைய ஒவ்வொருவரின் கடமை என்று கருதி நாம் நமது பணியினை சிறப்புடன் செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

நான் முதல்வன் திட்டமானது, குறிப்பாக பெற்றோர்களுக்கு இருக்கிற சிரமங்களை குறைத்து மாணவர்களை நாம் வழி நடத்திஅவர்களை உரிய வழிகளில் கொண்டு போய் சேர்ப்பதற்கு எல்லோரும் ஒருங்கிணைந்து பணியாற்றிட வேண்டு மெனவும், மேலும்,பள்ளி மாணவ, மாணவியர்கள் இடைநிற்றலை தடுப்பதுடன் தொடர்ந்து, கல்வி பயில்வதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென தெரிவித்தார்.

மேலும், ஈரோடு மாவட்டத்திலுள்ள 188 உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளிலும் உயர்கல்வி வழிகாட்டல் குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவில் தலைமை ஆசிரியர், முதுகலை ஆசிரியர், பள்ளி மேலாண்மைக் குழு தலைவர், முன்னாள் மாணவர்கள்,கல்லூரி நாட்டுநலப் பணித்திட்ட மாணவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் மாணவர்களுக்கு வழிகாட்டி வருகின்றனர். இதில் 1776 உறுப்பினர்களுக்கு ஒருநாள் பயிற்சி வழங்கப்பட்டுள்ளது.

மேலும்,அரசு பள்ளிமாணவ, மாணவியர்களுக்கு JEE, NEET போன்ற நுழைவுத்தேர்வுகளுக்கு விண்ணப்பிப்பதற்காக ரூ.3,73,000- வழங்கப்பட்டுள்ளது. நமது மாவட்டத்தை சேர்ந்த 8 மாணவர்கள் சென்னையில் இலவசமாக JEE Advance தேர்வுக்கு பயிற்சி பெற்று வருகின்றனர். மேலும், முதுநிலை ஆசிரியர்கள் 250 நபர்களுக்கு உயர்நிலை வழிகாட்டுதல் சார்ந்த பயிற்சிமற்றும் கையேடுகள் வழங்கப்பட்டுள்ளது. அனைத்து மேல்நிலை மாணவ,மாணவியர்களுக்குமின்னஞ்சல் முகவரி துவங்கப்பட்டுள்ளது. மேலும், சுயஉதவிக்குழு உறுப்பினர்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் துண்டுபிரசுரங்கள் வழங்கப்பட்டுள்ளது.

முன்னதாக,பள்ளிக் கல்வித் துறையின் சார்பில் 'நான் முதல்வன்" திட்டத்தின் கீழ் மேல்நிலைப்பள்ளிதலைமைஆசிரியர் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்களுக்கான உயர்கல்விக்கு வழிகாட்டும் நிகழ்ச்சி சிறப்பு பயிற்சியாளர் அஸ்வின் (சென்னை) மூலம் பயிற்சிகள் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில்,மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் குழந்தைராஜன், மாவட்ட கல்வி அலுவலர் (தனியார் பள்ளிகள்) ராமசாமி,நேர்முக உதவியாளர்கள், பள்ளிதுணை ஆய்வாளர்கள், மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள், பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags

Next Story
வாழ்க்கையே வெறுத்துப்போய் நிற்கிறதா? ஒரு நிமிடம் இதை படிங்க..!