/* */

திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்

அரசு மதுபான கடை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

HIGHLIGHTS

திண்டுக்கல்  கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்
X

கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்.

திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் ஊராட்சி ஒன்றியம் குட்டத்துப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த அன்னை நகர், பெரியார் நகர் பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள், தங்களது பகுதியில் புதியதாக மதுபான கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து, இரு தினங்களுக்கு முன்பு கொட்டும் மழையில் குட்டத்துப்பட்டி பகுதி வழியாகச் சென்ற அரசு பேருந்தை மறித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் தற்போது வரை மதுபானக் கடை பணிகளை நிறுத்துவதற்கு எந்த ஒரு அரசு அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்காததால், திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பெண்கள், குழந்தைகள் என 50 க்கும் மேற்பட்ட கிராமத்தினர், எங்களது பகுதியில் மதுக்கடை தேவை இல்லை என்று கூறி கோஷங்கள் எழுப்பி இன்று போராட்டம் நடத்தினர். இதனையடுத்து காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து, மாவட்ட ஆட்சியரிடம் தங்களது கோரிக்கைகளை மனுவாக கொடுத்தனர்.

Updated On: 6 Sep 2021 10:14 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அற்புதமான உடல் திடத்தைப் பெற இத ஃபாலோ பண்ணுங்க..!
  2. ஆன்மீகம்
    பரசுராம் ஜெயந்தி 2024 - நாள், நேரம், சிறப்புகள் என்னென்ன தெரியுமா?
  3. சோழவந்தான்
    சோழவந்தான் அருகே ,தென்கரை உச்சி மாகாளியம்மன் ஆலய விழா..!
  4. வீடியோ
    Vijay-யுடன் ரகசிய சந்திப்பு | வெளிப்படையாக பதில் சொன்ன Seeman |...
  5. லைஃப்ஸ்டைல்
    குழந்தையின் முதல் பிறந்தநாளா.. பெற்றோருக்கு கூறும் வாழ்த்துகள்
  6. காஞ்சிபுரம்
    சிலாம்பாக்கம் தடுப்பணை பணிகள் 50சதவீதம் நிறைவு..!.
  7. இராஜபாளையம்
    இராஜபாளையம் அருகே ,போலீஸாரிடமிருந்து தப்பிக்க முயன்றவர்களுக்கு கை,...
  8. லைஃப்ஸ்டைல்
    திரும்பத் திரும்பக் காய்ச்சும் பால்: நன்மையா? தீமையா?
  9. லைஃப்ஸ்டைல்
    நகைச்சுவையான பிறந்தநாள் வாழ்த்துகளின் தொகுப்பு..!
  10. காஞ்சிபுரம்
    பள்ளி பேருந்தில் பயணிப்போர் நம் குழந்தைகள் என எண்ண வேண்டும்..!