/* */

குண்டும் குழியுமாக உள்ள சாலையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

சிறுமலையில் கடமான் குளத்தில் இருந்து வேளாங்கண்ணி வரை செல்லும் குண்டும் குழியுமான சாலையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

HIGHLIGHTS

குண்டும் குழியுமாக உள்ள சாலையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
X

சேதமடைந்த சாலையில் காய்கறி வாகனத்தை இழுத்து செல்லும் பொதுமக்கள். 

திண்டுக்கல் மாவட்டம் சிறுமலை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட மாங்குளம் பகுதியில் இருந்து தாள கடை வேளாண் பண்ணை உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லக்கூடிய சுமார் எட்டு கிலோ மீட்டர் சாலை, கடந்த 2013 - 14 ஆம் ஆண்டுகளில் போடப்பட்டது. இதிலிருந்து மறுசீரமைப்பு செய்யப்பட்ட அந்தப் பகுதிகளில் மின்சாரம் கொண்டு செல்வதற்காக சாலையின் ஓரத்தில் பள்ளம் தோண்டப்பட்டு சேதமடைந்தது.

கடந்த சில நாட்களாக சிறுமலை மலைபகுதிகளில் அவ்வப்போது கனமழை பெய்து வரும் நிலையில், சேறும் சகதியுமாக சாலை மாறி உள்ளது. இதன் காரணமாக அப்பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் விளைவிக்கக் கூடிய காய்கறிகள் உள்ளிட்ட பொருள்களை திண்டுக்கல் சந்தை பகுதிகளுக்கு கொண்டு வர முடியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர்.

மேலும் இருசக்கர வாகனங்களில் செல்ல முடியாத நிலையில் தட்டுத்தடுமாறி செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் சரக்கு வாகனங்களில் காய்கறிகளை அதிக பாரம் ஏற்றாமல் குறைந்த பாரத்தில் ஏற்றிக்கொண்டு சாலையில் வருவதற்கு மிகவும் சிரமப்பட்டு கொண்டு வருகின்றனர். விவசாயிகள் ஒன்று சேர்ந்து கயிறு கட்டி சரக்கு வாகனங்களை இழுத்து வரும் அவலநிலை உள்ளது. ஏறத்தாழ எட்டு கிலோ மீட்டர் தூரத்தை கடந்து செல்வதற்கு 3 மணி நேரம் ஆகிறது.

இதனால் உரிய நேரத்தில் சந்தைகளுக்கு விளை பொருட்களை கொண்டு வர முடியாமல் தவிக்கின்றனர். இந்த சாலையை கிராம ஊராட்சி நிதியிலிருந்து அதிக செலவு தொகை செய்து போட முடியாத நிலை உள்ளது. மேலும் வனத்துறையின் கட்டுப்பாட்டில் இந்த பகுதி உள்ளது. எனவே வனத்துறை சார்பில் சேதமடைந்த சாலையை முழுமையாக சீரமைத்து தரமான சாலை அமைத்து தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

இந்த பகுதியில் உள்ள மக்கள் அவசர தேவைக்காக ஆம்புலன்ஸ் வாகனம் கூட செல்ல முடியாத நிலை உள்ளதால் உடல்நிலை பாதிக்கப்பட்டவர்களை மிகவும் சிரமப்பட்டு எட்டு கிலோமீட்டர் வரை கொண்டு வந்த பிறகுதான் ஆம்புலன்ஸில் ஏற்றி திண்டுக்கல்லில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு வர வேண்டிய சூழ்நிலை உள்ளது. விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் துன்பத்தை போக்கும் வகையில் தார் சாலைக்கு நிதி ஒதுக்கீடு செய்து விரைந்து பணிகளை நடத்த வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

Updated On: 26 Aug 2021 4:07 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    கருத்து கந்தசாமிகளே..நீங்களும் இதை படிங்க...!
  2. லைஃப்ஸ்டைல்
    விநாயகருக்குப் பிடித்த விருந்துகள்: சதுர்த்தி ஸ்பெஷல் படையல் செய்வது...
  3. தென்காசி
    தென்காசி மாவட்டத்தில் அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  4. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  5. ஆன்மீகம்
    “மின்சாரம் வேறு மின்சார பல்புகள் வேறு” யார் சொன்னது..?
  6. லைஃப்ஸ்டைல்
    பெண்மையை போற்றும் பெருவிழாவும் மகளிர் தின வாழ்த்துக்களும்
  7. லைஃப்ஸ்டைல்
    ரமலான் வாழ்த்துக்கள்: தமிழில் நம்பிக்கையின் ஒளி
  8. வீடியோ
    🔴LIVE : சவுக்கு சங்கர் மீது மேலும் ஒரு புகார் வீரலட்சுமி பரபரப்பு...
  9. வீடியோ
    🔥நீ மேல கை வச்சு பாரு🔥தொண்டர்கள் உச்சகட்ட ஆரவாரம் |🔥Annamalai...
  10. ஆன்மீகம்
    50 கிறிஸ்துமஸ் வாழ்த்துகள் தமிழில்