/* */

மாதம் ஊதியம் : ஊராட்சி நிர்வாகம் வழங்க தூய்மைப்பணியாளர்கள் கோரிக்கை

திண்டுக்கல் மாநகராட்சி, பழனி, கொடைக் கானல், ஒட்டன்சத்திரம் நகராட்சிகளில் மக்கள் தொகைக்கு ஏற்ப பணியாளர்களை நியமிக்க வேண்டும்.

HIGHLIGHTS

மாதம் ஊதியம் : ஊராட்சி நிர்வாகம் வழங்க  தூய்மைப்பணியாளர்கள் கோரிக்கை
X

திண்டுக்கல் தனியார் திருமண மஹாலில், மாநில தலைவர் ராமசாமி தலைமையில் நடைபெற்ற, மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை (சிஐடியு) ஊழியர் சங்க மாவட்ட ஆண்டு பேரவை கூட்டம். 

தூய்மைப் பணியாளர்களின் ஊதியத்தை ஊராட்சி நிர்வாகமே நேரடியாக வழங்க வேண்டும் என மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை (சிஐடியு) ஊழியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

திண்டுக்கல் தனியார் திருமண மஹாலில் மாநில தலைவர் ராமசாமி தலைமையில் நடைபெற்ற மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை (சிஐடியு) ஊழியர் சங்க மாவட்ட ஆண்டு பேரவை கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்ட்டது. கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட பிற தீர்மானங்கள்: முன்கள பணியாளர்களுக்கு அரசு அறிவித்த தொகை ரூ. 15 ஆயிரத்தை உடனே வழங்க வேண்டும். மேல்நிலைத் தொட்டி ஆபரேட்டர்களுக்கு அரசு அறிவித்த அடிப்படையில் ரூபாய் ஆயிரத்தி நானூறு ஊதிய உயர்விற்கான அரசாணையை உரிய திருத்தம் செய்து வெளியிட்டு அமலாக்கம் செய்ய வேண்டும். ஊராட்சிகளில் பணிபுரியும் தூய்மை காவலர்களுக்கு ஊராட்சி மூலம் நேரடியாக சம்பளம் வழங்கி, சேமநல நிதி பிடித்தம் செய்ய வேண்டும்.


அரசு ஊழியர் மற்றும் உள்ளாட்சி ஊழியர்களுக்கு இரண்டு ஆண்டுகளாக நிறுத்தி வைத்துள்ள அகவிலைப்படி உயர்வை வழங்க வேண்டும். ஊராட்சி தினக்கூலி ஒப்பந்த சுய உதவி குழு தூய்மைப் பணியாளருக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் நியமித்த தினக்கூலி ரூ. 509 வீதம் ஊதியம் வழங்க வேண்டும். திண்டுக்கல் மாநகராட்சி, பழனி, கொடைக்கானல், ஒட்டன்சத்திரம் நகராட்சி ஆகியவற்றில் மக்கள் தொகைக்கு ஏற்ப பணியாளர்களை நியமிக்க வேண்டும். ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர்கள் வாரிசுகளுக்கு கல்வித் தகுதிக்கு ஏற்ப பணி ஆணை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 10 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர்கள் சங்க மாநில பொதுச்செயலாளர் கணேசன், மாநில பொருளாளர் ராணி, மாவட்ட நகர ஊராட்சி நிர்வாகிகள் மற்றும் ஊழியர்கள் பலர் கூட்டத்தில் கலந்துகொண்டனர்

Updated On: 29 Aug 2021 9:34 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர் மாநகர்
    திருப்பூரில் மழை பெய்ய வேண்டி இஸ்லாமிய மக்கள் சிறப்பு தொழுகை
  2. திருப்பூர்
    பல்லடம்; மருத்துவா்களுக்கான ‘மெடி அப்டேட்’கருத்தரங்கு
  3. திருவண்ணாமலை
    வெயிலின் தாக்கத்திலிருந்து தற்காத்துக் கொள்ள, ஆட்சியர் அறிவுரை
  4. திருவண்ணாமலை
    அருணாசலேஸ்வரா் கோவிலில் குவிந்த பக்தா்கள்
  5. திருவண்ணாமலை
    அண்ணாமலையார் கோயிலில் வரும் 4 ம் தேதி முதல் தாராபிஷேகம்
  6. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை
  7. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  8. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  9. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  10. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை