/* */

எம்ஜிஆர் நினைவு நாள்: அதிமுகவினர் உருவச்சிலைக்கு மரியாதை

எம்ஜிஆர் உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியபின் இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

HIGHLIGHTS

எம்ஜிஆர் நினைவு நாள்:  அதிமுகவினர் உருவச்சிலைக்கு மரியாதை
X

எம்ஜிஆரின் 34 ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சி. சீனிவாசன் தலைமையில் அதிமுகவினர் எம்ஜிஆரின் உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

முன்னாள் முதல்வரும் அதிமுகவின் நிறுவனருமான எம்ஜிஆரின் 34 ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு திண்டுக்கல் மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சி. சீனிவாசன் தலைமையில் பேருந்து நிலையம் அருகே உள்ள எம்ஜிஆர் உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் அமைப்புச் செயலாளர் மருதராஜ், மாநில இளைஞர் இளம்பெண்கள் பாசறை செயலாளர் பரமசிவம், மத்திய கூட்டுறவு வங்கி ஒன்றிய தலைவர் ராஜ்மோகன், திண்டுக்கல் மேற்கு ஒன்றிய செயலாளர் ராஜசேகரன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் தென்னம்பட்டி பழனிச்சாமி மற்றும் மேற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட ஒட்டன்சத்திரம் ,வேடசந்தூர் ,திண்டுக்கல் ஆகிய பகுதிகளை சேர்ந்த சார்பு அணி நிர்வாகிகள் ,மாவட்ட, நகர, ஒன்றிய கழக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Updated On: 24 Dec 2021 3:45 PM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  2. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  3. இந்தியா
    கேரளாவில் 'நைல் காய்ச்சல்' பரவல்! 10 பேருக்கு பாதிப்பு!
  4. வணிகம்
    இப்ப தங்கம் வாங்கலாமா? விலை உயருமா..?குறையுமா..?
  5. இந்தியா
    கோவிஷீல்டு போட்டவர்களா நீங்கள்..! கவலைய விடுங்க..! டாக்டர் என்ன...
  6. வீடியோ
    🔴LIVE : சவுக்கு சங்கர் தரப்பு வழக்கறிஞர் கோபாலகிருஷ்ணன் பேட்டி ||...
  7. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை: காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  8. ஈரோடு
    ஈரோட்டில் தொழிலாளியின் உடல் உறுப்புகள் தானம்: அரசு மரியாதை
  9. உலகம்
    உலகளவில் கொரோனா தடுப்பூசியைத் திரும்பப் பெறும் அஸ்ட்ராஜெனகா
  10. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்டத்தில் காய்கறி இன்றைய விலை