/* */

திண்டுக்கல்லில் கன மழையால் வெள்ளத்தில் தத்தளிக்கும் பொது மக்கள்

திண்டுக்கல்லில் தொடர் கனமழையால் வெள்ளத்தில் தத்தளிக்கும் பொதுமக்கள், நிவாரண பொருட்கள் வழங்கவில்லை என குற்றச்சாட்டு

HIGHLIGHTS

திண்டுக்கல்லில் கன மழையால் வெள்ளத்தில் தத்தளிக்கும் பொது மக்கள்
X

ராஜிவ் காந்திநகர், சக்திபுரம் பகுதி முழுவதும் நீர் சூழப்பட்டு தீவு போல் காட்சியளிக்கிறது  

திண்டுக்கல் பாலகிருஷ்ணாபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட மரிய நாதபுரம், ராஜிவ் காந்திநகர் மற்றும் சக்திபுரம் உள்ளது. இப்பகுதியில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்களில் 300க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். திண்டுக்கல் சுற்றுவட்டார பகுதியில் தொடர்ந்து கன மழை அதிக அளவு பெய்தது.

இதில் சிறுமலை ஓடையிலிருந்து நீர் பெருக்கெடுத்து பெரிய செட்டிகுளத்திற்கு வந்து நிறைந்தது. குளத்தை ஒட்டிய ராஜிவ் காந்திநகர், சக்திபுரம் பகுதி முழுவதும் நீர் சூழப்பட்டு தீவு போல் காட்சி அளித்தது.

அங்கு வசித்த மக்கள் வீடுகளுக்குள் மழை நீர் புகுந்ததால் உண்ண உணவின்றி இழந்து அருகில் உள்ள சகாயமாதா மக்கள் மன்றத்தில் தங்குவதற்காக அனுமதித்துள்ளனர். நேற்று இரவு மழை நீர் இருந்த பொழுது அதிகாரிகள் பார்வையிட்டு குளத்தின் மடையை திறப்பதாக கூறினார்.

ஆனால் தற்போது வரை திறக்கப்படவில்லை. தொடர் மழையின் காரணமாக தற்போது முழங்காலுக்கு மேல் தண்ணீர் ஏறி உள்ளது. இன்னும் தொடர்ந்து மழை வருவதால் வீடுகள் இடிந்து விழுந்து விடுமோ என்ற ஐயத்தில் உள்ளனர்.

மேலும் சமுதாய கூடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்கு முறையாக சாப்பாடு, போர்வைகள் உள்ளிட்ட அத்யாவசிய தேவைகளை திமுகவை சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவர் ரேவதி நாகராஜ் செய்து தரவில்லை என குற்றம் சாட்டினர்.

மேலும் வழங்கப்பட கூடிப உணவும் மற்றும் உடைகள் ஆள் பார்த்து கட்சி பார்த்து வழங்குவதாக வேதனை தெரிவிக்கின்றனர். உடனடியாக மாவட்ட நிர்வாகம் உடனே தலையிட்டு நீரை வெளியேற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Updated On: 28 Nov 2021 9:16 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    Vijay-யுடன் ரகசிய சந்திப்பு | வெளிப்படையாக பதில் சொன்ன Seeman |...
  2. லைஃப்ஸ்டைல்
    குழந்தையின் முதல் பிறந்தநாளா.. பெற்றோருக்கு கூறும் வாழ்த்துகள்
  3. லைஃப்ஸ்டைல்
    நகைச்சுவையான பிறந்தநாள் வாழ்த்துகளின் தொகுப்பு..!
  4. காஞ்சிபுரம்
    பள்ளி பேருந்தில் பயணிப்போர் நம் குழந்தைகள் என எண்ண வேண்டும்..!
  5. வீடியோ
    🔴LIVE: சீமான் செய்தியாளர் சந்திப்பு | #Seeman #NTK #SrilankanTamils...
  6. லைஃப்ஸ்டைல்
    50 அசத்தலான தமிழ் பிறந்தநாள் வாழ்த்துக்கள்
  7. லைஃப்ஸ்டைல்
    அம்மாவுக்கு சொல்லுங்க.. அவங்க ரொம்ப சந்தோஷப்படுவாங்க
  8. ஈரோடு
    அந்தியூர் அருகே 2 ஏக்கர் ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு
  9. லைஃப்ஸ்டைல்
    கோவக்காய் சாப்பிட்டு இருக்கீங்களா? எடை குறைக்குமாம்..!
  10. லைஃப்ஸ்டைல்
    காலைப் பொழுதில் ஒரு புன்னகையுடன்: உங்கள் நாளை அழகாக்கும் ரகசியங்கள்