/* */

தொடர் மழை எதிராெலி: திண்டுக்கல்லில் 1 கிலோ மல்லிகை பூ ரூ.3,000-க்கு விற்பனை

தொடர் மழையின் காரணமாக திண்டுக்கல் பூ மார்க்கெட்டில் மல்லிகை கிலோ 1 ரூபாய் 3 ஆயிரத்திற்கு விற்பனை.

HIGHLIGHTS

தொடர் மழை எதிராெலி: திண்டுக்கல்லில் 1 கிலோ மல்லிகை பூ ரூ.3,000-க்கு விற்பனை
X

திண்டுக்கல் பூ மார்க்கெட்டில் பூக்களின் விலை அதிகரித்துள்ளது.

தொடர் மழையின் காரணமாக திண்டுக்கல் பூ மார்க்கெட்டில் மல்லிகை கிலோ 1 ரூபாய் 3 ஆயிரத்திற்கு விற்பனையானது இதேபோல் அனைத்து பூக்களின் விலையும் பன்மடங்கு உயர்ந்துள்ளது.

திண்டுக்கல் மாநகராட்சிக்கு சொந்தமான அண்ணா வணிக வளாகத்தில் ஒருங்கிணைந்த பூ மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இந்த பூ மார்க்கெட்டிற்கு திண்டுக்கல் அருகே உள்ள சின்னாளப்பட்டி, செம்பட்டி, வெள்ளோடு மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் விளைவிக்கப்படும் பூக்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுவது வழக்கம்.

இதற்கிடையே தொடர் மழை மற்றும் கடுமையான பனிப் பொழிவின் காரணமாக மொட்டுகள் செடியிலே கருகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக திண்டுக்கல் பூ மார்க்கெட்டிற்கு தினந்தோறும் குறைந்த அளவிலான பூக்கள் மட்டுமே விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது இதன் காரணமாக பூக்களின் விலை பன்மடங்கு உயர்ந்துள்ளது.

இன்று திண்டுக்கல் பூ மார்க்கெட்டில் மல்லிகை கிலோ ஒன்று ரூபாய் மூவாயிரத்துக்கு விற்பனையானது. முல்லைப் பூ கிலோ 1 ரூபாய் 1200 க்கும் கனகாம்பரம் கிலோ ரூபாய் இரண்டாயிரத்திற்கும் ஜாதிப்பூ கிலோ 1 ரூபாய் 700 க்கும், செவ்வந்தி ரூபாய் 200 க்கும் உள்பட அனைத்து பூக்களின் விலையும் பன்மடங்கு உயர்ந்துள்ளது.

இந்த விலை உயர்வின் காரணமாக வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். முகூர்த்தம் உள்ளிட்ட அன்றாட தேவைகளுக்காக சிறிதளவு பூக்களை கூட வாங்க விரும்பும் பொதுமக்களுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது.

Updated On: 9 Dec 2021 9:49 AM GMT

Related News

Latest News

  1. பொன்னேரி
    ஸ்ரீ கரி கிருஷ்ணா பெருமாள் கோவிலின் தெப்பத் திருவிழா!
  2. திருத்தணி
    குடிதண்ணீர் வழங்காததை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்!
  3. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  4. நாமக்கல்
    EVM அறைகளை கண்காணிக்க கூடுதலாக 10 சிசிடிவி கேமராக்கள்!
  5. வந்தவாசி
    கோடைகால விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்!
  6. திருவண்ணாமலை
    கூட்டாய்வுக்கு உட்படுத்தாத வாகனங்களுக்கு அனுமதி இல்லை, கலெக்டர்...
  7. லைஃப்ஸ்டைல்
    சமையலுக்கு ஏற்ற சிறந்த எண்ணெய் எது தெரியுமா?
  8. கோவை மாநகர்
    சவுக்கு சங்கர் நீதிமன்ற காவலில் கோவை சிறையில் அடைப்பு
  9. லைஃப்ஸ்டைல்
    டெல்லிக்கு ராசானாலும் பாட்டி சொல்லை தட்டாதே!
  10. லைஃப்ஸ்டைல்
    வணக்கம்... பலமுறை சொன்னேன், சபையினர் முன்னே! - தமிழில் காலை வணக்கம்...