/* */

கோரிக்கை பேஜ் அணிந்து மருத்துவர்கள் பணி

திண்டுக்கல்லில் அரசு மருத்துவர்கள் நான்கு அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, கோரிக்கை பேஜ் அணிந்து பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

HIGHLIGHTS

கோரிக்கை பேஜ் அணிந்து மருத்துவர்கள் பணி
X

தமிழ்நாடு அனைத்து அரசு மருத்துவர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவர்களுக்கும் வேறுபாடின்றி கால முறை ஊதியம் மற்றும் பதவி உயர்வு வழங்க கோரியும், அரசு சேவை மருத்துவர்களுக்கு முதுநிலை பட்ட மேற்படிப்பு மற்றும் சிறப்பு மருத்துவத்தில் 50 சதவீதம் இட ஒதுக்கீட்டை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும்,

4(D)2 அரசாணை குளறுபடிகளை நீக்கி நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மருத்துவ பணியிடங்களை அதிகரிக்க வேண்டும் என வலியுறுத்தியும், அரசு மருத்துவர்களுக்கு நியாயமான பணி மாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு உன்னுடைய நடத்தக்கோரி உள்ளிட்ட 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சுமார் 200க்கும் மேற்பட்ட அரசு மருத்துவர்கள் தாங்கள் வேலை பார்க்கும் மருத்துவமனைகளில் கோரிக்கை பேஜ் அணிந்து தங்கள் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து திண்டுக்கல் அனைத்து அரசு மருத்துவர்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் மருத்துவர் செந்தில்குமார் கூறுகையில் எங்களது 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று முதல் வரும் 27ஆம் தேதி வரை கோரிக்கை பேஜ் அணிந்து வரும் நோயாளிகளுக்கு நாங்கள் மருத்துவம் பார்த்து வருகிறோம். எங்களது கோரிக்கைகள் நிறைவேறாத பட்சத்தில் அடுத்த கட்ட போராட்டமாக வரும் 28ஆம் தேதி சென்னையில் மாபெரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட போவதாக தெரிவித்தார்.

Updated On: 19 Feb 2021 8:37 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  4. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  8. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?