/* */

தர்மபுரி மாவட்ட கோவில்களில் சாமி தரிசனம் செய்ய இன்று முதல் தடை

தர்மபுரி மாவட்டம் முழுவதும் இன்று முதல் அனைத்து கோவில்களிலும் சாமி தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

தர்மபுரி மாவட்ட கோவில்களில் சாமி தரிசனம் செய்ய இன்று முதல் தடை
X

மாவட்ட ஆட்சியர் திவ்யதர்ஷினி

தமிழ்நாடு முழுவதும் கொரோனா நோய்த் தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக பல்வேறு தளர்வுகளுடன் ஊரடங்கு உத்தரவு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. ஊரடங்கு காலத்தில் திருக்கோயில்களில் நடைபெறும் ஐதீக முறைப்படியான பூஜை புனஸ்காரங்கள் கோயில் அலுவலர்களால் மட்டும் நடத்திக்கொள்ளவும், பொதுமக்களுக்கு சுவாமி தரிசனம் செய்வதற்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தற்போது ஆடிப் பெருவிழாவை முன்னிட்டு முருகன் கோயில்கள் உட்பட அனைத்து கோயில்களுக்கும் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள், பக்தர்கள் அதிகளவில் சுவாமி தரிசனம் செய்வதற்கு வருகை புரிவார்கள் என எதிர்பாக்கப்படுகிறது. இதன் காரணமாக கொரோனா நோய் தொற்று பரவல் மீண்டும் அதிகரிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எனவே பொதுமக்கள் மற்றும் பக்தர்களின் நலன் கருதி தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து முருகன் திருக்கோயில்கள், தர்மபுரி, வே.முத்தம்பட்டி அருள்மிகு ஆஞ்சநேயர் திருக்கோயில், ஒகேனக்கல் அருள்மிகு தேசநாதேஸ்வரசுவாமி திருக்கோயில், தா.அம்மாப்பேட்டை அருள்மிகு சென்னியம்மன் திருக்கோயில், தீர்த்தமலை அருள்மிகு தீர்த்தகிரீஸ்வரர் திருக்கோயில் உட்பட அனைத்து பிராதான திருக்கோயில்கள் மற்றும் மாவட்டத்தில் உள்ள அனைத்து திருக்கோயில்களிலும் ஆடி கிருத்திகை திருவிழாவை முன்னிட்டு சுவாமி தரிசனம் செய் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த தடை 01.08.2021 (ஞாயிற்றுக்கிழமை) முதல் 03.08.2021 (செவ்வாய்க்கிழமை) வரை அமலில் இருக்கும். நோய்த்தொற்று பரவலின் காரணமாக ஒகேனக்கல், காவேரி ஆற்றங்கரையில் மக்கள் கூடி வழிபாடு செய்வதற்கும் அனுமதி இல்லை.

மேலும், ஆகமவிதிப்படி சுவாமி அலங்காரங்கள், பூஜை புனஸ்காரங்கள் அர்ச்சர்கள், திருக்கோயில் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் மூலம் தொடர்ந்து நடைபெறும் என மாவட்ட ஆட்சித் தலைவர் ச.திவ்யதர்சினி கேட்டுக்கொண்டுள்ளார்.

Updated On: 1 Aug 2021 4:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    கிரடிட் கார்டு பயன்பாட்டில் இவ்வளவு நன்மைகளா?
  2. லைஃப்ஸ்டைல்
    தலைமுடி வளர்ச்சிக்கு இனிமேல் முட்டையை பயன்படுத்துங்க!
  3. திருவண்ணாமலை
    விசாரணைக்கு அழைத்து வரப்பட்ட வாலிபர் தற்கொலை முயற்சி!
  4. லைஃப்ஸ்டைல்
    ஆயுத பூஜை: உழைப்பின் முக்கியத்துவத்தை உணர்த்தும் உன்னத நாள்
  5. ஆன்மீகம்
    அன்பிற்கும் அமைதிக்கும் வழிவகுக்கும் ரமலான்
  6. ஆரணி
    பாலியல் தொல்லை வழக்கில் விடுதி வார்டனுக்கு 20 ஆண்டு ஜெயில்!
  7. திருவள்ளூர்
    மகளிர் சுய உதவி குழு உறுப்பினர் தாக்கப்பட்டது பற்றி போலீஸ் விசாரணை
  8. க்ரைம்
    கரூர் அருகே விவசாய கிணற்றில் குளித்த 3 மாணவர்கள் நீரில் மூழ்கி...
  9. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் அன்பில் தர்மலிங்கத்தின் 105 வது பிறந்த நாள் விழா
  10. வீடியோ
    😭தேம்பி தேம்பி அழுத பள்ளி மாணவி | | ஆறுதல் சொன்ன Annamalai |...