/* */

ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்ட செயல்பாடுகள்: அதிகாரிகளுக்கு அமைச்சர் கே.என்.நேரு உத்தரவு

ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்ட செயல்பாடுகளை ஆய்வு செய்த அமைச்சர் கே.என்.நேரு, குடிநீர் இன்னும் போய்ச்சேராத பகுதிகளுக்கு வினியோகிக்க உத்தரவிட்டார்.

HIGHLIGHTS

ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்ட செயல்பாடுகள் குறித்து, தருமபுரி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக கூட்டரங்கில், தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, முன்னிலையில், இக்கூட்டம் நடைபெற்றது.

இதில், நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு பேசியதாவது: தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்கள் மற்றும் வேலூர் மாவட்டத்தின் குறிப்பிட்ட பகுதிகளுக்கு புளோரைடு தன்மையில்லாத பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க, கொண்டு வரப்பட்ட திட்டம் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம். தமிழகத்தில் ஆட்சிமாற்றம் ஏற்பட்டது. திட்டம் பயன்பாட்டுக்கு வந்தபோதும் அனைத்து மக்களுக்கும் இத்திட்ட குடிநீர் சென்று சேரவில்லை எனவும், ஒகேனக்கல் குடிநீருடன் நிலத்தடி நீரையும் கலந்து விநியோகிப்பதால் புளோரைடு பாதிப்பு தொடர்வதாகவும் குறைகள் எழுந்தன. அதைத் தொடர்ந்து அவற்றை கண்டறிந்து நீக்கிட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தருமபுரி மாவட்டத்தில் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்ட குடிநீர் விநியோகம் தொடர்பாக கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மக்கள் தொகை பெருக்கம், தண்ணீர் தேவை அதிகரிப்பு ஆகியவை காரணமாக ஒகேனக்கல் குடிநீர் பற்றாக்குறை பிரச்சினை ஏற்படுகிறது. இதைசரிசெய்ய உள்ளாட்சி நிர்வாகங்கள் நிலத்தடி நீரை ஒகேனக்கல் குடிநீருடன் கலந்து விநியோகம் செய்து வந்துள்ளனர். சில பகுதிகளுக்கு இதுவரை ஒகேனக்கல் குடிநீர் இன்னும் சென்று சேராமல் உள்ளது. ஓரிரு வாரங்களுக்குள் இந்த பிரச்சினைகளை எல்லாம் சரிசெய்து முறையாக ஒகேனக்கல் கூட்டு குடிநீர் வழங்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

ஒகேனக்கல் நீரை குடிக்கவும், சமைக்கவும் மட்டும் பயன்படுத்தவும், இதர தேவைகளுக்கு நிலத்தடி நீரை பயன்படுத்தவும் உள்ளாட்சி நிர்வாகங்கள் மூலம் பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த வலியுறுத்தப்பட்டுள்ளது என்று, அமைச்சர் கே.என்.நேரு கூறினார்.

முன்னதாக, தருமபுரி ஊராட்சி ஒன்றியம் அதகபாடி கிராமத்தில், ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்ட குடிநீர் விநியோகம் தொடர்பாக, அமைச்சர் நேரு களஆய்வு‌ மேற்கொண்டார். அதைத்தொடர்ந்து பென்னாகரம் பேரூராட்சி, ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்ட பணிகள்; நீரேற்று நிலையம் நீருந்து நிலையம் ஆகியவற்றின் செயல்பாடுகள் குறித்தும், நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றியம் நார்த்தம்பட்டி கிராமத்தில் குடிநீர் விநியோகம் தொடர்பாகவும் கள ஆய்வு‌ மேற்கொண்டார்.

Updated On: 9 July 2021 2:15 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிவிப்புகளை...
  2. லைஃப்ஸ்டைல்
    வைட்டமின் ஈ காப்ஸ்யூல் பயன்படுத்த அழகு டிப்ஸ்!
  3. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் கண் சிமிட்டிக் கொண்டே இருக்கறீங்களா?
  4. லைஃப்ஸ்டைல்
    பிரியும் விடைக்கு ஏன் பிரியாவிடை..?
  5. வானிலை
    வானிலை முன்னறிவிப்பு: டெல்லி, உ.பி., ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில்...
  6. இந்தியா
    ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்: முடிவுக்கு வந்த போராட்டம், இயல்பு நிலை...
  7. லைஃப்ஸ்டைல்
    தண்ணீரை மென்று சாப்பிடு; சாப்பாட்டை குடி..!
  8. லைஃப்ஸ்டைல்
    சந்தோஷம் மின்னல் போல வந்து வந்து போகும்; அமைதி எப்போதுமே நிரந்தரமானது...
  9. கோவை மாநகர்
    கோவை நகரப் பகுதிகளில் மிதமான மழை ; மக்கள் மகிழ்ச்சி
  10. வீடியோ
    Savukku வழக்கில் மூன்று நாட்களில் நடந்தது என்ன? | அடுத்து என்ன...