/* */

திட்டங்களை நிறைவேற்ற திராணியில்லாத திமுக அரசு: கே.பி.அன்பழகன் பேச்சு

திட்டங்களை நிறைவேற்ற திராணியில்லாத திமுக அரசு என முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்துள்ளார்.

HIGHLIGHTS

திட்டங்களை நிறைவேற்ற திராணியில்லாத திமுக அரசு: கே.பி.அன்பழகன் பேச்சு
X

தர்மபுரி நகராட்சி அலுவலகம் முன்பு திமுக அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினர்.

தர்மபுரி நகராட்சி அலுவலகம் முன்பு திமுக அரசைக் கண்டித்து அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் தர்மபுரி மாவட்ட கழக செயலாளரும், பாலக்கோடு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் கே.பி‌.அன்பழகன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நகர கழக செயலாளா் பூக்கடை ரவி வரவேற்புரை ஆற்றினார்.

இந்த கன்டன ஆர்ப்பாட்டத்தில் திமுக அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டது.

பின்னர் பேசிய முன்னாள் அமைச்சர் கே.பி. அன்பழகன், பொய்யான வாக்குறுதிகளைக் கொடுத்து மக்களை ஏமாற்றியது திமுக அரசு. ஆனால் தர்மபுரி மாவட்டத்தில் மக்கள் விழிப்போடு இருந்ததால் 5 சட்டமன்றத் தொகுதிகளையும் கழகம் கைப்பற்றியது. கடந்த எட்டு மாத கால ஆட்சியில் திமுக மக்களுக்காக எதுவுமே செய்யவில்லை. நீட் தேர்வை ரத்து செய்ய முடியாது என்பது திமுகவினருக்கு நன்கு தெரியும் , ஆனால் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்று பொய்யான வாக்குறுதி கொடுத்தார்கள் இது பொய்யா? உண்மையா? பொதுமக்களுக்கு தேவையான அனைத்து திட்டங்களையும் எடப்பாடியார் நிறைவேற்றிக் கொடுத்தார்.

சிப்காட் தொழிற்சாலை தர்மபுரி மாவட்டத்தில் ஆரம்பிக்க வேண்டும் என்று மக்களின் கோரிக்கையாக இருந்தது. 1,783 ஏக்கரில் சிப்காட் தொழிற்சாலை ஆரம்பிக்கப்படும் என்று அறிவித்தவர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள். 1,233 ஏக்கர் அரசு நிலம் 550 ஏக்கர் தனியாருக்கு சொந்தமான நிலம்.

இதில் ஆயிரம் ஏக்கரில் சிப்காட் தொழிற்சாலை முதல்கட்டமாக ஆரம்பிக்க எடப்பாடி யார் அறிவித்தார். கடந்த 8 மாதமாக அதன் மீது திமுக எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. வத்தல் மலையில் இருக்கும் மலைவாழ் மக்களிடம் மனுவாக சென்றார் மு .க. ஸ்டாலின். அந்த வத்தல்மலை சாலை வசதி இல்லாத நிலையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ரூ.18 .50 கோடி ரூபாய் ஒதுக்கி முதன்முதலாக சாலை வசதியை ஏற்படுத்திக் கொடுத்தார்.

அதேபோல அந்த சாலை பழுது ஆனவுடன் அதுக்கு பத்தரை கோடி ரூபாய் ஒதுக்கி கொடுத்து சீரமைத்தவர் எடப்பாடி பழனிசாமி. வத்தல் மலைக்குச் சென்ற முதலமைச்சர் மனுக்கள் மட்டுமே வாங்கினார். ‌ஆனால் அம்மலைவாழ் மக்களுக்கு எவ்வித உதவியும், திட்டங்களையோ, அறிவிக்கவில்லை அந்த மலைவாழ் மக்கள் சென்றுவர பஸ் வசதியை ஏற்படுத்தி தரவில்லை. ஜர்தலாவ் கால்வாய் 5000 மீட்டரிலிருந்து-புலிகரை ஏரிக்கு தண்ணீர் கொண்டுவரும் திட்டத்திற்கு டெண்டர் விடப்பட்டது. அங்கிருக்கின்ற நிலங்களை கையகப்படுத்தி விவசாயிகளுக்கு பணம் கொடுக்கப்பட்டு விட்டது. ஆனால் திமுக அரசு அந்த திட்டத்தை தொடங்காமல் கிடப்பில் போடப்பட்டுவிட்டது.

அதேபோல அலியாளம் அணைக்கட்டில் இருந்து தூள் செட்டி ஏரிக்கு தண்ணீர் கொண்டு வர நிலம் கையகப்படுத்தப்பட்டு டெண்டர் விடப்பட்டது. எட்டு மாத காலமாக ஏன் அந்த பணியை தொடங்கவில்லை. எண்ணேக்கொள் புதூரில் இருந்து தும்பலஹள்ளி அணைக்கு தண்ணீர் கொண்டுவர இரண்டு பேக்கேஜாக டெண்டர் விடப்பட்டது. அதில் ரூபாய் 173 கோடி கோடிக்கு டெண்டர் விடப்பட்டு அது ஏற்றுக்கொள்ளப்பட்டது. இந்த நீர்ப்பாசன திட்டங்களை கையாலாகாத திமுக அரசு நிறைவேற்றாமல் கிடப்பில் போட்டுள்ளது.

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஏழை மாணவர்கள் படிப்பதற்காக தோட்டக்கலை மற்றும் வேளாண்மைத்துறை சார்பில் தோட்டக்கலை மற்றும் வேளாண்மை பற்றிய கல்லூரிகளை வழங்கி 92 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டது ஆனால் திமுக அரசு மாணவர்களை சேர்க்க வில்லை.கழக அரசால் பல்வேறு பொறியியல்,சட்ட,அரசு பல்தொழில் நுட்பப் கல்லுாரிகள்,அரசு கலைக்கல்லூரி களை வழங்கியது. தமிழகம் முழுவதும் ஒரே நேரத்தில் 11 மருத்துவக் கல்லூரிகளை வழங்கிய பெருமை கழக அரசை சாரும்.

அரசாணை வெளியிடப்பட்ட வேளாண் மற்றும் தோட்டக்கலை பட்டய கல்லூரிகளில் ஏன் சேர்க்கை நடத்தவில்லை?

நீர்ப்பாசன திட்டங்கள் சிப்காட் தொழிற்சாலை உள்ளிட்ட திட்டங்களை கிடப்பில் போடாமல் நிறைவேற்றுங்கள். கடந்த ஐந்தாண்டு கால ஆட்சியின் கழக அரசின் சார்பில் பல்வேறு நலத்திட்டங்களை வழங்கி சாதனை படைத்தது. அதில் நீங்கள் பாதியை கூட வழங்க முடியாது வழங்கி பாருங்கள்.

தூள் செட்டி ஏரிக்கு தண்ணீர் கொண்டுவரும் திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்தப்பட்டு பணம் ஒதுக்கி டெண்டரும் விடப்பட்டு விவசாயிகளுக்கு பணம் வழங்கப்பட்டு விட்டது. ஆனால் அந்த திட்டத்தை கடந்த எட்டு மாத காலமாக நிறைவேற்றாமல் கிடப்பில் போட்டுள்ளது. இதுபோன்று தமிழகத்தில் எந்த ஒரு திட்டங்களையும் நிறைவேற்ற திராணி இல்லாத அரசுதான் திமுக அரசு என பேசினார் ‌.இக்கூட்டத்தில் கழக அமைப்பு செயலாளர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.சிங்காரம், பாப்பிரெட்டிப்பட்டி சட்ட மன்ற தொகுதி உறுப்பினர் ஆ.கோவிந்தசாமி, அரூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் வே.சம்பத்குமார், மாவட்ட கழக அவைத் தலைவர் தொ.மு.நாகராஜன், தர்மபுரி மாவட்ட கூட்டுறவு ஒன்றிய தலைவர் பொன்னுவேல்,

மாவட்ட பொருளாளர் நல்லதம்பி,மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் கே.வி.அரங்கநாதன், மாவட்ட இலக்கியஅணி செயலாளர் தகடூர் விஜயன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் கோவிந்தசாமி, மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு இணைச் செயலாளர் சரவணபிரபு,ஒன்றிய கழக செயலாளர்கள், கோபால், வேலுமணி, விஸ்வநாதன், மதிவாணன், நீலாபுரம் செல்வம், சிவப்பிரகாசம், செந்தில்குமார், செல்வராஜ், பசுபதி, செந்தில்குமார், சேகர், முருகன், தங்கராஜ், தனபால்,அன்பு, செல்வம், மகாலிங்கம் உள்ளிட்ட மாவட்ட , நகர, பேரூர் கழக, சார்பு அமைப்பு நிர்வாகிகள், கூட்டுறவு சங்கத் தலைவர்கள் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் உள்பட 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.பென்னாகரம் ஒன்றிய கழக செயலாளா் வேலுமணி நன்றி கூறினார்.

Updated On: 17 Dec 2021 4:45 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிவிப்புகளை...
  2. லைஃப்ஸ்டைல்
    வைட்டமின் ஈ காப்ஸ்யூல் பயன்படுத்த அழகு டிப்ஸ்!
  3. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் கண் சிமிட்டிக் கொண்டே இருக்கறீங்களா?
  4. லைஃப்ஸ்டைல்
    பிரியும் விடைக்கு ஏன் பிரியாவிடை..?
  5. வானிலை
    வானிலை முன்னறிவிப்பு: டெல்லி, உ.பி., ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில்...
  6. இந்தியா
    ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்: முடிவுக்கு வந்த போராட்டம், இயல்பு நிலை...
  7. லைஃப்ஸ்டைல்
    தண்ணீரை மென்று சாப்பிடு; சாப்பாட்டை குடி..!
  8. லைஃப்ஸ்டைல்
    சந்தோஷம் மின்னல் போல வந்து வந்து போகும்; அமைதி எப்போதுமே நிரந்தரமானது...
  9. கோவை மாநகர்
    கோவை நகரப் பகுதிகளில் மிதமான மழை ; மக்கள் மகிழ்ச்சி
  10. வீடியோ
    Savukku வழக்கில் மூன்று நாட்களில் நடந்தது என்ன? | அடுத்து என்ன...